

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே உள்ள மேல் சிறுவள்ளூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் அதே கிராமத்தில் முடி திருத்தும் சலூன் கடை நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பழனி அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம் குடும்ப செலவுக்காக இரண்டு லட்ச ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார். பின்னர் பல மாதங்களாக கடன் தொகையை திருப்பி கொடுக்காமல் இருந்திருக்கிறார். இதனால் பழனி அடிக்கடி சலூன் கடைக்கு சென்று கடன் கொடுத்த பணத்தை விரைவில் திரும்ப செலுத்துமாறு தொல்லை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
அதற்கு பழனி “தற்போது மிகுந்த பண கஷ்டத்தில் இருக்கிறேன் கொஞ்சம் நேரம் கொடுங்கள்” என கேட்டிருக்கிறார் இதனால் ஆத்திரமடைந்த பணம் கொடுத்த ராமச்சந்திரன் முடி திருத்தும் தொழிலாளியான பழனியின் சலூன் கடைக்கு சென்று கடைக்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் பேசி கடையை இழுத்து மூடியதாகவும் சொல்லப்படுகிறது. அனைவரின் முன்னிலையிலும் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி தொழில் செய்யும் கடையை இழுத்து மூடியதால் பழனி மிகுந்த மிகுந்த மனவேதனைக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது.
எனவே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த பழனி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதை பார்த்த பழனியின் மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு பழனியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் பழனியின் உறவினர்கள் அவரது உயிரிழப்பிற்கு காரணமான ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று தமிழ்நாடு முடி திருத்துவோர் நல சங்கத்தினருடன் சேர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபொண்பரப்பி (பொறுப்பு) காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சாலை மறியலில் ஈடுபட்டுவந்த முடி திருத்தும் தொழிலாளி பழனியின் உறவினர்களிடமும் முடி திருத்தும் தொழிலாளர் சங்கத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சந்தனம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் கொடுத்தவர் தனது சலூன் கடையை மூடி அசிங்கப்படுத்தியதால் சலூன் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.