
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் பாழடைந்த வீட்டு வசதி வாரிய அலுவலக கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் காவல்துறையினர் சென்று சோதனை செய்தபோது பாழடைந்த கட்டிடத்தின் மேல் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் இருப்பதைக் கண்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இருந்து கிடந்தது அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய சங்கர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரது போனை கைப்பற்றிய போலீசார் அவர் கடைசியாக பேசியுள்ள எண்களுக்கு போன் செய்து விசாரித்துள்ளனர். அப்போது ஜைஷிவ என்பவற்றின் எண் மட்டும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சங்கர் இருந்த போது அந்த இடத்தில் இருந்த எண்களில் ஜைஷிவாவின் என்னும் இருந்துள்ளது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் ஜெய்சிவாவை தேடி வந்தனர்.
பின்னர் காக்களூர் பதுங்கியிருந்த ஜெய்சிவாவிடம் விசாரணை மேற்கொண்டதில் நண்பர்களான சங்கரும் ஜெய்சிவாவும் பேசிக்கொண்டிருந்த போது ஜெய்சிவா குறைந்த விலையில் போன் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு சங்கர் தனக்கு தெரிந்த ஒரு நண்பர் கடையில் பத்தாயிரம் ரூபாய்க்கு நல்ல போன் கிடைக்கும் நான் வாங்கி தரேன் பணம் கொடு என கேட்டுள்ளார். உடனே ஜெய்சிவாவும் தன்னிடம் இருந்த ஐந்தாயிரம் ரூபாயை சங்கரிடம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் மீதி பணத்தை கொடுக்காமலே போனை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சங்கர், ஜெய்சிவா மற்றும் அவரது நண்பர்களான 21 வயதுடைய கைலாஷ் மற்றும் சுமன் ஆகியோர் பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர் அப்போது மீண்டும் சங்கர் மற்றும் ஜெய்சிவாவிற்கு இடையே போன் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டுள்ளது இந்த தகராறில் ஜெய்சிவாவிற்கு ஆதரவாக இருந்த கைலாஷ், சுமன் இருவரும் ஜெய்சிவாவுடன் சேர்ந்து கொண்டு சங்கரின் தலையில் கல்லை எடுத்து போட்டு கொலை செய்துள்ளனர்.
இதனை அடுத்து ஜெய் சிவா, சுமன், கைலாஷ் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். சக நண்பர்கள் சேர்ந்து உடனிருந்த நண்பனை தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் சங்கரின் உறவினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.