“நீ எவன் கூட தொடர்பில் இருக்குற..” - 15 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் புகார்.. திருவண்ணாமலை அரசு மருத்துவர் மீது குற்றச்சாட்டு!

எதிர்க்கும் மாணவிகளை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைத்து இயற்கை உபாதைகள் கழிக்க விடாமல்..
thiruvannamalai medical college.
thiruvannamalai medical college.
Published on: 
Updated on: 
1 min read

திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு டயாலிசிஸ் பிரிவில் பயிலும் 15 மாணவிகளிடம் துறைத் தலைவர் மருத்துவர் சோஜீ தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் டயாலிசிஸ் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயிலும் 15 மாணவிகளும், துறைத் தலைவர் மருத்துவர் சோஜீ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அவர் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும், இதனால் மாணவிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

டயாலிசிஸ் பிரிவில் கடந்த 15 வருடங்களாக பணியாற்றிவரும் மருத்துவர் சோஜி தற்போது தலைமை மருத்துவராக உள்ள நிலையில் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதில் எதிர்த்து பேசும் மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் மாணவிகள் பற்றி தவறான குற்றசாட்டுகளை கூறுவதாக சொல்லப்படுகிறது. மேலும் எதிர்த்து பேசுபவர்கள் விடுதி மாணவிக்களாக இருந்தால் “நீ எவன் கூட தொடர்பில் இருக்குற.. எனக்கு தெரியும்” என்று அவதூறு பரப்பும் வகையில் வகுப்பறையில் பேசி மிரட்டியுள்ளார். மேலும் எதிர்க்கும் மாணவிகளை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைத்து இயற்கை உபாதைகள் கழிக்க விடாமல் சித்ரவதை செய்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக, மாணவிகள் அனைவரும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தலைமை மருத்துவர் மாணவிகளை நேரடியாகத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்று புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாணவி ஒருவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளார். அத்துடன், பாலியல் சீண்டல் புகாரால் ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இருப்பினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, நேற்று முன்தினம் மாணவி ஒருவர் மீண்டும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் ஹேமாவதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, புகார் அளித்த மாணவிகள் அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 15 மாணவிகள் அளித்துள்ள பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.