தனியாக இருந்த பெரியம்மா… அரிவாளால் வெட்டிக் கொன்ற மகன்! 4 சவரன் நகைக்காக கொலையா?

எதற்காக இந்த கொலையில் ஈடுபட்டார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்
thoothukudi murder
Published on: 
Updated on: 
2 min read

தூத்துக்குடி கந்தன் காலனி மூன்றாவது தெரு மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல். இவரது மனைவி சசிகலா, இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் நிரஞ்சன் குமார் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மகள் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். சசிகலாவின் கணவர் சித்திரைவேல் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சசிகலா மகன் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வீட்டில் தனியாக வசித்து வந்த சசிகலா நேற்று பிற்பகல் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். மேலும் அவரது கழுத்தில் கிடந்த தாலி செயின் மற்றும் வீட்டில் இருந்த செல்போன் ஆகியவை காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையிலான காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். குற்றவாளியை கைது செய்யும் வகையில் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் மோப்ப நாய் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை செய்து தப்பி ஓடிய குற்றவாளியை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நகையை பறித்து சென்றதால் நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் மேலும் மர்மநபர்கள் யாரும் இந்த கொலையில் ஈடுபட்டார்களா? என்று கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் தனிப்படை காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் இந்த கொலையில் ஈடுபட்டது, கொலை செய்யப்பட்ட சசிகலாவின் வீட்டு அருகே உள்ள அவருக்கு மகன் முறையுடைய.. சசிகலாவின் தங்கை மகன் விக்னேஷ் என்ற முனீஸ் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலை செய்துவிட்டு மூன்றாவது மைல் பகுதி அருகே தலைமறைவாக இருந்த விக்னேஷ் என்ற முனிசை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கொலை செய்துவிட்டு பறித்துச் சென்ற தங்கசெயின் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து காவல்துறை. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்..

இன்று (28/10) பிற்பகல் 2,30 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த கொலையில் ஈடுபட்டது கொலை செய்யப்பட்ட சசிகலாவின் உறவினரான விக்னேஷ் என்ற முனீஸ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பறித்துச் சென்ற 4 பவுன் தங்கசெயின் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் எதற்காக இந்த கொலையில் ஈடுபட்டார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com