“மூணு பேரும் சேர்ந்து தான் கொலை பண்ணோம்” - வாலிபரை கொன்றுவிட்டு அசால்ட்டாக சொன்ன சிறுவர்கள்.. முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்!

சந்துரு மற்றும் சுதனுடன் சேர்ந்து மணியனூரில் தங்கி உள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சேட்டனும் ஒன்றாக சுற்றி திரிந்ததாக சொல்லப்படுகிறது.
சந்துரு சுதன்
சந்துரு சுதன்
Published on
Updated on
1 min read

சேலம் மாவட்டம், மணியனூரை சேர்ந்த 16 வயதுடைய 10ம் வகுப்பு மாணவர் சந்துரு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய 9ம் வகுப்பு மாணவர் சுதனும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறு வயதில் இருந்து நண்பர்களாக இருந்து வந்த நிலையில் இரண்டு சிறுவர்களும், மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதாக சொல்லப்படுகிறது. மேலும் சந்துரு மற்றும் சுதனுடன் சேர்ந்து மணியனூரில் தங்கி உள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சேட்டனும் ஒன்றாக சுற்றி திரிந்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீலநாயக்கன் பட்டி மதுபான கடைக்கு அருகில் சுதன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கோகுல் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோகுல் சுதனை மிரட்டி அவரிடம் இருந்து பணம் பறிக்க முயற்சி செய்திருக்கிறார். பின்னர் இருவரும் சமாதானமாகி நண்பர்களான நிலையில், சுதன் மூலம் சந்துருவும் கோகுலும் நண்பர்களாகி பழகி வந்திருக்கின்றனர். எனவே மூவரும் அடிக்கடி சேர்ந்து ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சந்துரு, சுதன் மற்றும் சேட்டன் ஆகிய மூவரும் சேர்ந்து தெருவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த கோகுல் “இன்று நான் உங்களுக்கு டிரீட் கொடுக்கிறேன், புதிய ஸ்பாட் கண்டுபிடித்திருக்கிறேன் அங்கு போய் ஜாலியாக இருக்கலாம்” என கூறி இவர்கள் 3 பேரும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி எல்லைமூட்டு குட்டை ஜருகுமலை அடிவாரத்திற்கு சென்று நேற்று இரவு மது அருந்தி இருக்கின்றனர். அப்போது சுதனிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து சென்று பழைய சண்டை குறித்து பேசி வாக்குவாதம் நடைபெற்றது. தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பகுதிக்கு சென்ற சந்துரு மற்றும் சேட்டன், சுதனுக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து போதையில் இருந்த சிறுவர்கள் 3 பேரும் சேர்ந்து கோகுலை கத்தியால் குத்தி முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளனர். இதில் 2 பேரை அப்பகுதி மக்கள் பிடித்து நடந்தது குறித்து விசாரித்த போது கொலை செய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர் அதனை தொடர்ந்து அவர்கள் மல்லூர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தப்பியோடிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். சிறுவர்கள் 3 பேரும் சேர்ந்து கோகுலை கொலை செய்ததை செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து மல்லூர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com