
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளாளனூர் கிராமத்தைச் சேர்ந்த திருக்குமரன் என்பவர் ரயில்வே துறையில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பெரியகம்மியம்பட்டு, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய அறிவழகி என்பவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், திருக்குமரன் திருமணமாகி சில மாதங்களிலேயே அறிவழகியை பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
திருமணத்தின் பொது வரதட்சணையாக நகை மற்றும் பணம் கொடுக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து அறிவழகியை “உனது தாய் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா” என அடித்து துன்புறுத்து வந்துள்ளார். அறிவழகியின் தந்தையும் ரயில்வே துறையில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரின் ஓய்வு பெற்ற பணத்தில் மகளின் பெயரில் சொந்தமாக அவருக்கு வீடு கட்டி கொடுத்தார். அந்த வீட்டையும் தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என திருக்குமரன் தினந்தோறும் தனது மனைவியை கட்டாயபடுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் நேரத்தில் அறிவழகி அவரது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற நாட்றம்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அறிவழகி தானாக தூக்கு மாட்டிக் கொண்டாரா? அல்லது கணவரே அடித்து தூக்கு மாட்டி விட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் அறிவழகியின் கணவர் திருக்குமரனை கைது செய்து விசாரணை நடத்தி வந்ததனர். இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிவில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பின்னர் திருகுமாரனிடம் போலீசார் மேற்கொண்ட கிடுக்குபிடி விசாரணையில் “குடித்து விட்டு வீட்டிற்கு சென்ற திருக்குமரன் அறிவழகியிடம் வாக்குவாதம் செய்து அவரை அடித்து கொன்று தூக்கில் மாட்டி நடனமாடியது தெரியவந்துள்ளது” மேலும் அறிவழகியின் எட்டு வயது மகனும் “அப்பா தான் அம்மாவை இப்படி செஞ்சாங்க” என போலீசாரிடம் சாட்சி கூறியுள்ளார். இதனை அடுத்து திருகுமரனை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.