“நிர்வாணமாக ஊர் சுற்றிய கணவன் மனைவி” - மாட்டின் வாலை வெட்டி மாந்திரீக பூஜை.. அச்சத்தில் மக்கள்!

நேரலையாக பதிவிடுமாறு கூறியதுடன், பழனி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசியதாகவும் சொல்லப்படுகிறது...
Tirupattur Karambur Pooja Incident
Tirupattur Karambur Pooja Incident
Published on
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம், குருசிலாப்பட்டு அடுத்த கரம்பூர் ஏரிக்கரை பகுதியில், வினோதமான முறையில் இரவு நேரங்களில் ஒரு குடும்பம் பூஜைகள் செய்வதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரம்பூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் 52 வயதுடைய பழனி, இவரது மனைவி தீபா இந்த தம்பதிக்கு 16 வயதில் பள்ளி படிக்கும் மகள் ஒருவர் உள்ளார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கந்திலி பகுதியில் உள்ள உறவினர் ஒருவருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி நடைபெற்ற பூஜையில் பழனி கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு, தனது உடலில் கருப்பசாமி இருப்பதாகவும், தான் பூஜை செய்வதாகவும் பழனி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, மனைவி தீபாவையும் அழைத்துக்கொண்டு வீட்டில் இரவு நேரங்களில் வினோதமான முறையில் பூஜைகள் செய்து வந்ததாகவும், வீட்டில் இருந்த கண்ணாடிகளை உடைத்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இருவரும் வினோதமான முறையில் இரவு நேரங்களில் நிர்வாணமாக ஊர் சுற்றி பூஜைகள் செய்து வந்ததாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த (ஆக -06) அவர்கள் வளர்த்து வந்த மாட்டின் வாலை வெட்டி பூஜை செய்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்பத்தினரின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், பழனியின் கைகளை கட்டி வைத்து குருசிலாப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது, சிலர் பழனியை வீடியோ எடுத்த போது, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் நேரலையாக பதிவிடுமாறு கூறியதுடன், பழனி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த குருசிலாப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பழனியை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, பொதுமக்கள் பழனியின் கைகளை கட்டி வைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பழனி மனநலம் பாதிப்படைந்து இவ்வாறு செய்தாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com