“ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ள 17 வயது சிறுமி” - மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்துக்கு வீட்டுக்காரர்!

நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும்போது கொண்டு வரும் பிரியாணியை சிறுமிக்கு கொடுத்து...
tirupathur pocso
tirupathur pocso
Published on
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம், ஏரிக்கரை பகுதியின் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு செல்லாத சிறுமி பெற்றோர் வேலைக்கு செல்லும் நேரங்களில் வீட்டில் தனியாக இருப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் அப்துல் ரகிப் என்பவரின் 58 வயதுடைய மகன் அப்துல் வாகித் சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று பிரியாணி செய்யும் தோழி செய்து வந்திருக்கிறார். நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும்போது கொண்டு வரும் பிரியாணியை சிறுமிக்கு கொடுத்து அவருடன் பழகி வந்திருக்கிறார்.

இந்நிலையில் வீட்டில் சிறுமியின் பெற்றோர்கள் இல்லாததை அறிந்த அப்துல் வாகித் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை கொன்று விடுவேன் என மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பின்னர் சிறுமியை மிரட்டலுக்கு பயந்து வெளியில் சொல்லாமல் இருந்த நிலையில் அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அப்துல் வாகித் அடிக்கடி சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். இதில் சிறுமி கர்பமடைந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, சிறுமியின் வயிறு பெரிதாக இருப்பதை அவரது பெற்றோர் கவனித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமி மற்றும் அவரது பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அப்துல் வாகித் சிறுமியை கொலை மிரட்டல் விடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், இதனால் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அப்துல் வாகித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சிறுமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்களை சேகரித்து வருகின்றனர். 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com