
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர் கடந்த மாதம் 18 ஆம் தேதி தனது சொந்த வேலைக்காக திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். அப்போது அதிகாலை நேரம் என்பதால் சசிகுமாரின் காரை ஓட்டியா ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து கலசப்பாக்கம் அருகே கலசப்பாக்கம் ஆற்று பாலத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் எதிரே வந்த இருசக்கர வாகன ஓட்டி பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து சசிகுமார் போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் அழைத்து புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தன் காரின் ஆவணங்களை சரி பார்த்துள்ளார். பின்னர் சசிகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட உதவி ஆய்வாளர் கோவிந்தன் இந்த வழக்கில் இருந்து பிரச்சனையில்லாமல் தப்பிக்க உதவி செய்கிறேன் என சசிகுமாரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அடுத்து சசிகுமார் உதவி ஆய்வாளர் கோவிந்தனுக்கு எட்டாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார்.
மேலும் சம்பவ நடத்த இடத்திற்கு வரவேண்டாம் என்றும், உயிரிழந்தவரின் ஜாதி பேரை சொல்லி அவர்களை இழிவு படுத்தியும், தகாத வார்த்தைகளால் பேசியும் குறிப்பிட்ட சாதியினர் இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள் என பேசியுள்ளார். மேலும் “இங்க வந்தா அவங்க ஒரு லட்சம் ரெண்டு லட்சம் புடுங்க பாப்பாங்க நீ வராத ஏற்கனவே அவனை ஹாஸ்பிடல் போய் பார்த்தது போதும்” என கூறி சசிகுமாரை பயமுறுத்தும் வகையில் பேசி தனக்கு சாதகமாக நடந்து கொள்ள வைத்துள்ளார். விபத்து நடந்து இருபது நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில் காவல்துறையினர் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தன் சசிகுமார் லஞ்சம் வாங்கிய மற்றும் உயிரிழந்தவரின் சமூகத்தை பற்றி தவறாக பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.