“பூசாரியுடன் தகாத உறவு” - நான்கு வருடமாக கணவன் மனைவி போல் வாழ்ந்த வாழ்க்கை.. சிக்கன் வாங்க சென்ற இடத்தில் வெட்டி படுகொலை!

இது குறித்து முத்துராமலிங்கத்திற்கு தெரியவந்த நிலையில் விஜயா மற்றும் முத்துராமலிங்கம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர்.
“பூசாரியுடன் தகாத உறவு” - நான்கு வருடமாக கணவன் மனைவி போல் வாழ்ந்த வாழ்க்கை.. சிக்கன் வாங்க சென்ற இடத்தில் வெட்டி படுகொலை!
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள மங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.முத்துராமலிங்கத்திற்கு அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஏரல் ராஜபதி அருகே உள்ள சொக்கப்பழங்கரை கிராமத்தைச் சேர்ந்த பூசாரியான ரவி என்பவருக்கும் விஜயாவுக்கும் கோவிலுக்கு செல்லும் பொழுது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முத்துராமலிங்கத்திற்கு தெரியவந்த நிலையில் விஜயா மற்றும் முத்துராமலிங்கம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து விஜயா கடந்த நான்கு ஆண்டுகளாக கோவில் பூசாரியான ரவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தனது குழந்தைகளுடன் விஜயா மற்றும் ரவி ஆகியோர் பழைய வீட்டை காலி செய்து கொண்டு சோட்டையன் தோப்பு அருகே உள்ள சண்முகபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர்.எனவே ரவி தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டிற்கு சோட்டையன் தோப்பு மெயின் ரோட்டில், பங்க் எதிரே உள்ள ஒரு பாஸ்ட் புட் கடையில் தனது குழந்தைகளுக்கு சிக்கன் 65 வாங்குவதற்காக சென்றுள்ளார். அந்த கடையில் சிக்கன் வாங்கிக் கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்திலும், நடந்தும் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ரவியை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்து நகர் காவல் துறையினர் மற்றும் நகர துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான போலீசார், கொலை செய்யப்பட்ட ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கோயில் பூசாரி ரவியை , எதற்காக வெட்டி கொலை செய்தனர் வேறு ஏதும் முன்விரோதம் உள்ளதா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் கோயில் பூசாரி இரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com