BIG BREAKING : “சாகும் வரை ஆயுள் தண்டனை” - பொள்ளாச்சி வழக்கில் அதிரடி தீர்ப்பு.. 9 பேருக்கும் தண்டனை அளித்த நீதிபதி!

அருண்குமார் ஆகிய 9 பெரும் கைது செய்யப்பட்டு. திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் ஆப்பிள் போன்
pollachi pocso case
pollachi pocso case
Published on
Updated on
1 min read

பொள்ளாச்சியில் கடந்த 2019 - ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேவி அவர்களின் தலைமையில் வழங்கப்பட்ட தீர்ப்பில், “9 பெரும் குற்றவாளி” என தீர்ப்பு வழக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பாலியில்  வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மாற்று அவரது அண்ணன் அளித்த நன்கு புகார்கள். சிபிஐ விசாரணைக்கு  மாற்றப்பட்ட நிலையில் கோவை சிறப்பு மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேவி தலைமையின் கீழ்  வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

இதில் சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன், திருநாவுக்கரசு, ஹெரன் பால், பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பெரும் கைது செய்யப்பட்டு. திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் ஆப்பிள் போன் லேப்டாப்பில் சிக்கிய முக்கிய ஆதாரங்களை வைத்து, அவர்களுக்கு எதிராக 48 சாட்சிகள், 420 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட இருந்த நிலயில் நீதிமன்றத்தின் முன் பகுதியில் மகளிர் சங்கத்தினர் “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க வேண்டும்” என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சிபிசிஐடி தரப்பில் இருந்து 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது,குற்றப்பத்திரிகையிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரையும் விவரங்களையும் நீக்கியுள்ளது நீதிமன்றம். இந்த வழக்கில் தீர்ப்பாக குற்றம் சாட்டப்பட்ட “9 பேரும் குற்றவாளிகள்” என தீர்ப்பளித்துள்ளார் நந்தினி தேவி.

பொள்ளாச்சி வழக்கில்  தண்டனையாக  ஏ1 குற்றவாளி சபரிராஜன், ஏ2 குற்றவாளி திருநாவுக்கரசு, ஏ3 குற்றவாளி சதிஷ், ஏ4 வசந்தகுமார், ஏ 5 மணிவண்ணன், ஏ 6 பாபு, ஏ 7ஹெரான் பால்,ஏ8 அருண்குமார் ஏ 9 அருளானந்தம், ஆகிய 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பிடாக வழங்க உத்தரவிட்டுள்ள நிலையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூபாய் 10 முதல் 11 லட்சம் இழப்பீடு கிடைக்கும் வகையில் உத்தரவானது வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும் 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com