“தெருவ களவாட்டாங்க சார்.. கண்டுபுடிச்சி தரலை..” ஆட்சியர் அலுவலகத்தில் ஜி.பி.முத்து பரபரப்பு புகார்!

இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் எனவும் ஜி.பி.முத்து கூறியுள்ளார்.
GB muthu
GB muthu
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் - உடன்குடி, பெருமாள் புரத்தில் உள்ள கீழ தெருவை கண்டு பிடித்து தர கோரி நடிகர் ஜி.பி.முத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காலன் குடியிருப்பு வருவாய் கிராமம் உடன்குடி, பெருமாள் புரத்தில் நத்தம் சர்வே எண் 233 ல் கீழ தெரு என்று ஒரு தெரு இருந்தது, நத்தம் சர்வே எண் 233 /21 இடம் முழுக்க அரசு புறம்போக்கு பாதையாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வருவாய் துறை ஆவணங்களில் உள்ளது.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் சிட்டிசன் திரைபடத்தில் வரும் அத்திப்பட்டு கிராமம் காணாமல் போனது போன்று இந்த கீழ தெருவும் காணாமல் போய் விட்டது. அந்த தெரு இருந்த இடம் முழுக்க பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் செல்லும் பாதையும் அடைக்கப்பட்டு உள்ளது.

எனவே தாங்கள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மேற்படி இடத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உடன்குடி பெருமாள் புரத்தில் காணாமல் போன கீழ தெருவை கண்டு பிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் நடிகர் ஜி.பி.முத்து தனது குடும்பத்தினருடன் வருகை தந்து மனு அளித்தார்.

இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் எனவும் ஜி.பி.முத்து கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும் 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com