
தூத்துக்குடி ஆலந்தா கிராமத்தை சேர்ந்தவர்கள் மாடசாமி வள்ளியம்மாள் தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் மகள் திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
வழக்கம் போல் கடந்த (மே 10)காலையில் கல்லூரிக்கு சென்ற மாடசாமியின் மகள் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள். காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதில் விசாரணை நடத்தியதில் கல்லூரி மாணவி அதே பகுதியை சேர்ந்த சபரியை காதலித்து வந்ததும் அவருடன் சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதே கிராமத்தை சேர்ந்த பிச்சையா என்பவரது மகன் சபரிக்கு, பெண்களை ஆசை வார்த்தை கூறி, வண்டியில் ஊர் சுற்ற கூட்டிச்சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்வது தான் வேலையாக இருந்துள்ளது. தற்போது சபரியின் வலையில் கல்லூரி மாணவி சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இருவரின் மொபைல் போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் காவல்துறை அவர்களை தேடி வருகிறது. கல்லூரி மாணவி காணாமல் பொய் கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகும் நிலையில் போலீஸ் அவர்களை இன்னும் கண்டு பிடிக்காததால் மனைவியின் உறவினர்கள் தூத்துக்குடியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து மனு அளித்துள்ளனர்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி மனைவியின் அக்கா முருகேஸ்வரி “ எனது தங்கையை சபரி என்பவர். ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்தி சென்று விட்டார். கண்டுபிடித்து தர சொல்லி போலீசில் புகாரளித்த நிலையில் 10 நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே SP அலுவலகத்தில் மனு அளிக்க வந்தோம்.
அந்த சபரி என்ற பையன் ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்த இரண்டு பெண்களும் அவர் மீது போலீசில் புகைரளித்துள்ள நிலையில் தற்போது அதே போல் என் தங்கையையும் ஏமாற்றியுள்ளார்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்