கரப்பான்பூச்சி போல கவிழ்ந்த கார்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நண்பர்கள்...

இன்று அதிகாலை அண்ணாசாலையில் இரு கார்கள் மோதி கட்டுப்பாடுகளை இழந்து விபத்துக்குள்ளானது.
கரப்பான்பூச்சி போல கவிழ்ந்த கார்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நண்பர்கள்...
Published on
Updated on
1 min read

சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்த ஹரிஸ் ஜெய்ன் என்பவரும் அவரது நண்பரும் சொந்த வேலை காரணமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் காரில் பயணித்துள்ளனர்.

அண்ணாசாலை மசூதி அருகே உள்ள சிக்னலில் மற்றொரு கார் சாலையைக் கடக்கும் போது இரு கார்களும் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளது.

லேசான காயங்களுடன் ஹரிஸ் ஜெய்னும் அவரது நண்பரும் தப்பினர். இவர்களது கார் அதிவேகமாக வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்துக் குறித்து சிந்தாதரிப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com