மனைவி கழுத்தை நெறித்து கொலை ... நாடகமாடிய கணவன் கைது ...

மனைவி கழுத்தை நெறித்து கொலை ...  நாடகமாடிய கணவன் கைது ...
Published on
Updated on
2 min read

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே பா.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகாலெட்சுமி தம்பதியின் குடும்பம். வழக்கம் போல் குடும்பத்துடன் இரவு உறங்கி காலையில் எழுந்த போது மனைவி அம்சலேகா வீட்டில் இல்லை. கணவன் ஏழுமலை பதற்றத்துடன் அங்குமிங்கும் தேடிய நிலையில் வீட்டுக்கு பின்னால் உள்ள புளிய மரத்தில் அணிந்திருந்த புடவையால் தூக்கில் சடலமாக மனைவி தொங்கி கொண்டிருந்தார்.

மனைவியின் மரண கோலத்தை கண்டு ஏழுமலை கதறினார். மண்ணில் புரண்டு அழுதார். மனைவியின் கால்களை பிடித்துக்கொண்டு ஓலமிட்டார். ஊர்மக்கள் ஓன்று திரண்டு கணவனை சமாதனம்  செய்து மனைவியின் உடலை போலிசார் உதவியுடன் உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அம்சலேகாவின் தந்தை புகார் அளிக்கவே  திருநாவலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கை மாற்றிப் பதிவு செய்தனர். போலிசாரின் முதல் சந்தேகம் ஓவர் சீன் போட்ட கணவனின் பக்கம் தான் திரும்பியது. அவரிடம் நடத்திய கிடுக்கிப்படி விசாரணையில் மகாலெட்சுமியின் மர்ம மரண முடிச்சு  அவிழ தொடங்கியது. ஏழுமலைக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது.

இதையறிந்த அம்சலேகா கணவணுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவ நாள், இரவில் நடைபெற்ற சண்டையின் போது, ஏழுமலை தாக்கியதில் அம்சலேகா மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து கள்ளகாதலி மகாலெட்சுமி மற்றும் அவரது கணவனையும் வீட்டிற்கு  வரவழைத்த ஏழுமலை, மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்து புளிய மரத்தில் தொங்க விட்டார்.  பின்னர் ஏதுவும் நடைபெறாதது போல் வீட்டிற்குள் வந்து படுத்துக்கொண்டார்.  

காலையில் மனைவி மரணத்தை தாங்க முடியாதது போல் நடித்து நாடகமாடியும் பலன் இல்லாமல் வசமாக சிக்கிக் கொண்டார். காவல்துறை விசாரணையில் கொலையை  ஒப்புக் கொண்ட நிலையில் ஏழுமலை, கள்ளக்காதலி மகாலெட்சுமி, அவரது கணவர் ராஜிவ்காந்தி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com