மாலைமுரசின் எதிரொலி... கமிஷனரின் அதிரடி ஆக்‌ஷன்...

மாலைமுரசு செய்திகள் எதிரொலியான இரண்டு மணி நேரத்தில் சங்கராபுரத்தில் அனைத்து சிசிடிவி கேமராக்களையும் சரி செய்ய கமிஷனர் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, பொதுமக்கள் மாலைமுரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

மாலைமுரசின் எதிரொலி... கமிஷனரின் அதிரடி ஆக்‌ஷன்...

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளது. குற்றச்சபங்களை தடுக்க சங்கராபுரத்தில் காவல்துறையின் சார்பில் வைக்கப்பட்ட15-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் சுமார் ஆறு மாதங்களாக மேலாக முற்றிலும் பழுதாகி உள்ளது.

இதனால் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் சங்கராபுரம் காவல்துறையினர் திணறி வருகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளதாக நமது மாலை முரசு செய்திகளில் செய்திகளில் ஒளிபரப்பானது.

மேலும் படிக்க | நெல்லையில் பிரபல ரவுடி ‘ராக்கெட் ராஜா’ கைது எதிரொலி......

நமது செய்திகளில் ஒளிபரப்பான இரண்டு மணி நேரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் அவர்கள் சங்கரா புறத்தில் காவல்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் தனிப்படை அமைத்து உடனடியாக இருசக்கர வாகன கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் எனவும் சங்கராபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணனுக்கும் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | தொடர் விடுமுறையின் எதிரொலி...! ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!

இதனை ஒட்டி, பழுதான சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டது. மேலும், செய்தியை வெளியிட்ட மாலைமுரசு செய்திகள் தொலைக்காட்சிக்கும் அதனை உடனடியாக உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | முத்துப்பேட்டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பு!