"வெளிய சொன்ன.. விஷம் வைத்து கொன்றுவேன்" பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் கணவன்! தட்டிக்கேட்ட மனைவியை துன்புறுத்திய குடும்பம்

மற்ற பெண்களுடனும் தவறான உறவில் இருப்பதாகவும், அவர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வருவதாகவும்..
Domestic violence case
Domestic violence case
Published on
Updated on
1 min read

உத்திரபிரதேசம் மாநிலம், ஹத்ராஸில் வரதட்சணைக் கொடுமை, உடல்ரீதியான தாக்குதல் மற்றும் பிற பெண்களுடன் தொடர்பில் இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை ஒரு பெண் தனது கணவரான காவலருக்கு எதிராகக் கூறியதை அடுத்து, மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் தகவல் அறிக்கையின்படி, புகார்தாரரான சாருல், அலிகர் மாவட்டத்தின் அந்த்லா கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ் குமார் ராவத் என்பவரை 2022 ஏப்ரலில் திருமணம் செய்துள்ளார். அந்தத் திருமணத்திற்காக அந்த பெண்ணின் குடும்பத்தினர் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது மாகாண ஆயுதக் காவல் படையில் (PAC) ராவத் பணியாற்றி வந்துள்ளார். மேலும், தங்களது திருமணத்தின் ஆரம்ப மாதங்களில் தன்னை நன்றாக நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர், 2024 ஆகஸ்ட் 19 அன்று தங்களுக்கு மகள் பிறந்த பிறகும், அதனைத் தொடர்ந்து தனது கணவர் உத்தரப் பிரதேச காவல்துறைக்கு மாற்றப்பட்ட பிறகும் அவரது நடத்தை முற்றிலும் மாறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். முதல் தகவல் அறிக்கையின்படி, அவர் மற்ற பெண்களுடனும் தவறான உறவில் இருப்பதாகவும், அவர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வருவதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது கைபேசியில் சந்தேகத்திற்கிடமான தொலைபேசி எண்களையும் உரையாடல்களையும் கண்டறிந்த பிறகு, தனது கணவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால், ​​அவர் அந்த சாதனத்தை உடைத்து விட்டு "வெளியே சொன்னால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என மிரட்டியதாக சாருல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சாருலின் கணவர் ராவத், அவரது தாய் மற்றும் மூத்த சகோதரர் ஆகியோர் தன்னை உடல்ரீதியாகத் தாக்கியதாகவும், வார்த்தைகளால் திட்டியதாகவும், மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும் சாருல் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு விஷம் வைப்பதாகவும் அல்லது தன்னையும் தனது குடும்பத்தினரையும் பொய்யாகக் குற்றம் சாட்டப்போவதாக தனது கணவர் மிரட்டுவதாகவும் சாருல் மேலும் தெரிவித்துள்ளார். புகாரின்படி, 2025 டிசம்பர் 17 அன்று இரவு, ராவத் சாருலை தாக்கி, வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றுள்ளார். இதைத் தொடர்ந்து, சாருல் தன் தந்தையிடம் தகவல் தெரிவித்துவிட்டு, தன் பெற்றோர் வீட்டிற்குத் சென்றுள்ளார். மேலும், பெண்ணின் புகாரின் பேரில் அவரது கணவரான காவலர் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட்ட அதிகாரி ஹிமான்ஷு மாத்தூர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com