"ஆற்றில் வீசப்பட்ட சமூக ஆர்வலர் உடல்" - மதுவிற்கு எதிரான மனைவியை மது கொடுத்தே.. கொலை செய்த கணவர்!

பணத்திற்காக ஒரு பெண்ணை அவரது கணவர் மற்றும் மைத்துனர்கொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.கழுத்தை ஸ்கார்ஃப் மூலம் நெறித்து கொலை
saroj devi
saroj deviAdmin
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில், சொத்து மற்றும் பணத்திற்காக ஒரு பெண்ணை அவரது கணவர் மற்றும் மைத்துனர் (கணவரின் தம்பி) கொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.கழுத்தை ஸ்கார்ஃப் மூலம் நெறித்து கொலை செய்து, உடலை ஆற்றில் வீசியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்திர பிரதேசம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் சரோஜ் தேவி இவர் ஒரு சமூக ஆர்வலர் ஆவர், இந்த நிலையில் இவரது கணவரும் கணவரின் தம்பியும் இவரை கொலை செய்து ஆற்றியில் வீசியுள்ளனர், சரோஜ் தேவியின் மைத்துனர், அவரை மது அருந்த கட்டாயப்படுத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து அவரை ஒரு ஸ்கார்ஃப் மூலம் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பின்னர், அவரது உடலை மறைப்பதற்காக, குற்றவாளிகள் அதனை அருகிலுள்ள பெத்வா ஆற்றில் வீசியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.காவல்துறையினர், சரோஜ் தேவியின் உடலை ஆற்றில் இருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சரோஜ் தேவியின் கணவர் மற்றும் மைத்துனர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹமீர்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) இதை குறித்து, "இந்த கொலை சொத்து மற்றும் பணம் தொடர்பான தகராறு காரணமாக நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவரை மது அருந்த கட்டாயப்படுத்தி, பின்னர் கொலை செய்து உடலை ஆற்றில் வீசியுள்ளனர். வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது."

மேலும், சரோஜ் தேவியின் குடும்பத்தினர் மற்றும் அவரது கிராம மக்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர். சரோஜ் தேவி, மது எதிர்ப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கேற்று வந்தவர் என்பதால், இந்த கொலை அவரது சமூகப் பணிகளுக்கு எதிரான தாக்குதலாகவும் பார்க்கப்படுகிறது என்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com