

உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் பகுதியில், தனது கள்ளக்காதலரிடமிருந்து பிரிந்ததைத் தொடர்ந்து, தூக்க மாத்திரைகள் கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து தனது கணவரையும் குடும்ப உறுப்பினர்களையும் மயக்கமடையச் செய்து, பின்னர் அவர்களைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவி கைது.
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட மம்தா (37), விசாரணையின் போது தனது கணவர் உமாசங்கரை (42) கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள. அந்த தம்பதியினருக்கு 18 வயது மகன் மற்றும் 12 வயது மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு திடீரென சத்தம் கேட்டு எழுந்த அவர்களின் மகள், தன் சகோதரன் விகாஸை எச்சரித்த நிலையில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
படுக்கையில் கழுத்தில் சேலை கட்டப்பட்ட நிலையில் தங்கள் தந்தை கிடப்பதைக் கண்ட அந்த பிள்ளைகள், அவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகித்துள்ளனர். இதனையடுத்து, உமாசங்கர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. விசாரணையின் போது, வெள்ளிக்கிழமை மாலை மம்தா வீட்டிற்கு ஒரு குளிர்பானத்தைக் கொண்டு வந்துள்ளார். அந்த குளிர்பானத்தில் தூக்க மாத்திரைகளைக் கலந்து குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்ததாக மம்தாவின் மகள் போலீசாரிடம் கூறியுள்ளார்.
பின்னர் மம்தா உமாசங்கருடன் மாடிக்குச் சென்றதாகவும், குழந்தைகள் தூங்குவதற்காகக் கீழேயும் சென்றுள்ளனர். காவல்துறையின் தகவல்படி, இந்த சம்பவம் நடக்க காரணமாக கூறப்படுவது, உமாசங்கர் 2024 பிப்ரவரியில் பணி விஷயமாக குஜராத் சென்றிருந்தார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தக் காலகட்டத்தில், மம்தா, நகுல் பாவேஷ் (38) என்ற அவரது அண்டை வீட்டுக்காரருடன் திருமணத்தை மீறிய உறவை வளர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரை நீதிமன்றத் திருமணம் மூலம் மணக்க விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த கள்ளத்தொடர்பு காரணமாக தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, உமாசங்கர் தனது மனைவி மம்தாவை பிலிபிட்டிற்குத் திரும்ப அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், கொலைக்குப் பிறகு மம்தா தப்பிச் சென்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து, 50-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் மம்தா, தனது வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வயலில் ஒளிந்திருந்தபோது காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மேலும், காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.