“விடுதியில் உறங்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை” - அதிகாலையில் நடந்த சம்பவம்.. வாலிபர் அறைக்குள் சென்றது எப்படி?

உடலைத் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை உணர்ந்த அந்தப் பெண் திடுக்கிட்டு எழுந்தார்...
Velachery Womens Hostel Incident
Velachery Womens Hostel Incident
Published on: 
Updated on: 
1 min read

சென்னை வேளச்சேரியில் உள்ள பெண்கள் விடுதியில், அறையில் தோழியுடன் தூங்கிக் கொண்டிருந்த 27 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எலக்ட்ரீசியன் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் படித்து வரும் 27 வயது பெண் ஒருவர், வேளச்சேரியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வருகிறார். கடந்த (அக் 17) ஆம் தேதி வழக்கம் போல கல்லூரிக்கு சென்று வந்த மாணவி இரவு, தனது தோழியுடன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அதிகாலை, மாணவிக்கு யாரோ தன்னை தொடுவது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. பின்னர் மர்ம நபர் ஒருவர் தனது உடலைத் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை உணர்ந்த அந்தப் பெண் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது, அறையில் வாலிபர் ஒருவர் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அலறி கூச்சலிட்டுள்ளார். இதனால் மற்ற மாணவிகள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் அவ்விடத்தில் கூடிய நிலையில் அச்சமடைந்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள மாணவிகள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர், வேளச்சேரி சீதாபதி நகரில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கியிருந்த 22 வயதுடைய பிரதாப் இளவரசன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பிரதாப் இளவரசன், ஆண்கள் விடுதியில் தங்கியபடி எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி பிரதாப் இளவரசன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தனியார் விடுதிகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com