“இரவு முழுவதும் சீரழிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள்” - அலறல் சத்தம் கேட்டு அச்சமடைந்த மக்கள்.. வேளாங்கண்ணியில் பரபரப்பு!

ஆசை வார்த்தைகளைக் கூறி சிறுமிகள் இருவரையும் அங்குள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது..
Velankanni Minor Girls Abuse Case
Velankanni Minor Girls Abuse Case
Published on: 
Updated on: 
1 min read

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், வீட்டை விட்டுக் கோபித்துக் கொண்டு வந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகளைத் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாகப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகள், வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோபித்துக்கொண்டு வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். இரவு நேரத்தில் வேளாங்கண்ணி கடற்கரைப் பகுதியில் தனியாக நின்றுகொண்டிருந்த சிறுமிகளிடம் கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பேச்சுக் கொடுத்துள்ளனர்.

பின்னர், ஆசை வார்த்தைகளைக் கூறி சிறுமிகள் இருவரையும் அங்குள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் இருந்து 15 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா வந்துள்ளனர். அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த ஆண்டனி, விஷால் ஆகிய இருவரும் சிறுமிகளைத் தனியார் விடுதியில் தங்கவைத்து, நள்ளிரவு முழுவதும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. அப்போது சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டதால், அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

nagai abuse.
nagai abuse.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் சிங்கப்பெண் அதிரடிப்படையினர், பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளையும் மீட்டனர். தொடர்ந்து, கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஆண்டனி, விஷால் ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் நாகையில் உள்ள பெண்கள் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வேளாங்கண்ணியில் சுற்றுலாவுக்கு வந்த இளைஞர்கள் மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார் எழுந்து, இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com