

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்துள்ள ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் 55 வயதுடைய வெங்கடேசன். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் குடியாத்தம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள தச்சு கடையில் தச்சராக வேலை செய்து வருகிறார். தினமும் ஒடுக்கத்தூர் பகுதியில் இருந்து குடியாத்தம் வந்து செல்வது சிரமம் என்ற காரணத்தால் வெங்கடேசன் அவரது முதலாளி வீட்டிலேயே தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.
முதலாளி வீட்டில் தங்கி இருந்த வெங்கடேசன் அந்த வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்லவும் அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் நன்றாக பேசி பல்கி வந்திருக்கிறார். வழக்கம் போல சிறுமி நேற்று முன்தினம் மாலை வெங்கடேசன் முதலாளி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முதலாளியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிறுமியிடம் பேச்சு கொடுத்து தனது அறைக்கு அழைத்துச் சென்ற வெங்கடேசன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார்.
பின்னர் வெங்கடேசனிடம் இருந்து தப்பி தனது வீட்டிற்கு சென்ற சிறுமி அழுதுகொண்டே தனக்கு நடந்தது குறித்து அவரது தாயிடம் தெரிவித்த நிலையில் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து தச்சு தொழிலாளி வெங்கடேசனை கைது செய்தனர்.
முதலாளி வீட்டில் தங்கி வேலை செய்த கூலி தொழிலாளி அந்த வீட்டுக்கு விளையாட வந்த நான்கு படிக்கும் சிறுமியிடம் யாரும் இல்லாத பொது தவறாக நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெங்கடேசனை கைது செய்வதற்கு முன் சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தாக்கியதாக சொல்லப்படும் நிலையில் அவரை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.