

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக கிளியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பெண்ணை அடித்து கொலை செய்து இங்கு வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கொலையான பெண்ணின் பெயர் மகேஸ்வரி என்பதும் 46 வயதுடைய இவர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
மகேஸ்வரிக்கு ஏற்கனவே இரண்டு திருமணமாகி அவர் இரண்டு கணவர்களுடனும் வாழாத நிலையில் 20 வருடங்களுக்கு முன்பு தன்னை காதலித்து கர்ப்பமாக்கிய காதலனுடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ள நிலையில் இருவரும் தொடர்ந்து பழகி வந்திருக்கின்றனர். பின்னர் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி மகேஸ்வரி அவரது காதலனுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் அந்த மூன்றாவது நபரை தேடி வந்த நிலையில் அவர் சென்னை பகுதியை சேர்ந்த 52 வயதுடைய கண்ணன் என்பதும் அவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதனிடையே வானூர் அருகே தலைமறைவாக இருந்த கண்ணனை தனிப்படை போலீசார் மணிமாறன் மற்றும் மற்ற போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் கண்ணனிடம் போலீசார் விசாரித்ததில் அவர்கள் இருவரும் 20 வருடங்களுக்கு முன்னர் பழகி வந்ததாகவும் பிறகு பிரிந்து விட்டதாகவும் இடையில் சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் தங்களது பழைய காதலை புதுப்பித்து பழகி அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மகேஸ்வரி பணத்துக்காக பலரிடம் இதுபோல் உல்லாசமாக இருந்ததாகவும் அது இவருக்கு பிடிக்காமல் போகவே அந்த பெண்ணை அழைத்து வந்து செங்கல்பட்டு படாளம் என்னும் இடத்தில் எனது லாரியை நிறுத்தி விட்டு இருவரும் மது அருந்திவிட்டு பிறகு மகேஸ்வரியை அடித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் தாலி ஜெயின் உள்ளிட்டவைகளை எடுத்து விட்டு திண்டிவனம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் அருகே சாலையோரம் வீசி வீசி விட்டு வழக்கம் போல் புதுவைக்கு லாரியை எடுத்து சென்றதாக கைதான கண்ணன் தெரிவித்தார்
இதனை அடுத்து கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டகுப்பம் டிஎஸ்பி ரூபன் குமார் தெரிவிக்கையில் .கொலை நடந்த 12 மணி நேரத்தில் கொலையாளியை தனிப்படை அமைத்து துரிதமாக விசாரணை மேற்கொண்டு அவர்களை கைது செய்ததாக டிஎஸ்பி தெரிவித்தார் கொலை நடந்து 12 மணி நேரத்தில் கொலையாளியை பிடித்த போலீசாருக்கு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பாராட்டு தெரிவித்ததாகவும் டிஎஸ்பி தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.