

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 33 வயதுடைய ராமசாமி. இவர் கொத்தனார் கூலி வேலை செய்து வந்த நிலையில் இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவரது உடன் பிறந்த அண்ணன் வெங்கடேசன் என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் வெங்கடேசன் உயிரிழப்பிற்கு தம்பி ராமசாமி குடும்பம் தான் காரணம் என நினைத்து வெங்கடேசன் குடும்பத்தினர் பிரச்சனையில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது .
மேலும் வெங்கடேசன் மற்றும் ராமசாமியின் வீடுகள் அருகருகே ஒட்டி இருப்பதால் இரு குடும்பத்திற்கும் இடையே இடப் பிரச்சனையும் ஏற்பட்டு அவ்வப்போது வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. எனவே இரண்டு குடும்பத்திற்கும் நீண்ட நாள் பகை இருந்து வந்த நிலையில் வெளியூருக்கு வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்த ராமசாமி இன்று மதுரை மாவட்டத்திற்கு கொத்தனார் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பி ஆவியூர் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார்.
அப்போது அங்கு சென்ற ராமசாமியின் அண்ணன் வெங்கடேசனின் 20 வயதுடைய மகன் பிரவீன் மற்றும் அவரது நண்பர்களான ராயர் பட்டியைச் சேர்ந்த 19 வயதுடைய செல்லப்பாண்டி, ஆவியூரைச் சேர்ந்த 18 வயதுடைய கருப்பசாமி, 18 வயதுடைய சஞ்சீவ் ஆகிய நான்கு பேரும் கஞ்சா போதையில், அரிவாள் கத்தியுடன் ராமசாமியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். முப்பது பிரவீன் “எங்கப்பா கொன்னுட்டிங்க அதே மாறி நீயும் சாவு” மேலும் அவர்களை தொட்டுக்க வந்த பொது மக்களையும் கத்தி மற்றும் அரிவாள் காட்டி மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் மிதந்த ராமசாமியின் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ராமசாமியை கொலை செய்து தப்பி ஓடிய பிரவீன், செல்லப்பாண்டி, கருப்பசாமி, சஞ்சீவ் ஆகிய நான்கு பேரும் ஆவியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ஏற்கனவே இவர்கள் நான்கு பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன் கஞ்சா போதையில் பள்ளி மாணவனை தாக்கி சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள இந்த ஆவியூர் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதால் இது போன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். சித்தப்பாவை சொந்த அண்ணன் மகனே கஞ்சா போதையில் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.