திருமணமான 2 நாளில் பிரிந்த தம்பதி.. தகாத உறவில் இருந்த கணவன்? மர்ம கும்பலால் வெட்டிக் கொலை!

"விசாரணையில் கொலை செய்யப்பட்ட கூலித் தொழிலாளி தவசியப்பனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு திருமணத்தை மீறிய உறவு.."
virudhunagar murder
Published on: 
Updated on: 
1 min read

விருதுநகர் மாவட்டம் தவசிலிங்காபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தவசியப்பன் (42). கூலித்தொழிலாளியான இவருக்கு நாகலட்சுமி என்பவருடன் திருமணமாகி இரண்டே நாளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவியை பிரிந்த தவசியப்பன் தனது தாய் பிச்சயம்மாளுடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த தவசியப்பனை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் வீடு புகுந்து சாரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆமத்தூர் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட தவசியப்பனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட கூலித் தொழிலாளி தவசியப்பனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகாத உறவின் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

virudhunagar murder

இந்நிலையில் அதே விருதுநகரில் ராஜபாளையம் அருகே விவசாய கூலி தொழிலாளி ஒருவர் கண்மாய் பகுதியில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து 2 கொலை நடந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பதற்றதை ஏற்படுத்தியுள்ளது. தொடர் கொலைகளால் மக்கள் கடும் பீதியில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com