திருமணமான இளைஞரை குறிவைத்து 'ஹனி டிராப்'! காதல் வலை விரித்த பெண்ணுடன்.. ஹோட்டல் அறையில் மீட்டிங்! 50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்

சாதாரண வாழ்த்தில் தொடங்கிய உரையாடல் படிப்படியாக அதிகரித்து காதலாக மாறியுள்ளது. அதாவது 'காஜல் பர்மார்' அந்த பெண் அவரை ஒரு காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.
Gujarat honey trap case
Gujarat honey trap case
Published on: 
Updated on: 
2 min read

குஜராத்தில் திருமணமான ஆணை குறிவைத்து, ஹனி டிராப்-பில் சிக்கவைத்து பணம் பறித்த கும்பலை கைது செய்தது காவல்துறை. குஜராத்தின் மோர்பியை சேர்ந்த 22 வயது திருமணமான இளைஞர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு ஹனி டிராப்-பில் சிக்கவைக்கப்பட்டு, பின்னர் அவரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் கேட்டு ஒரு குழுவால் மிரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

காவல்துறை புகாரின்படி, அந்த நபருக்கு அவரது திருமண நாளன்று வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் 'காஜல் பர்மார்' என்ற பெயருடன் காணப்பட்ட ஒரு பெண், அவருக்கு நண்பர் கோரிக்கை (friend request) அனுப்பியுள்ளார். மேலும், அவர் அந்த ஆணின் திருமண நாளுக்கான வாழ்த்தினை தெரிவித்துள்ளார். சாதாரண வாழ்த்தில் தொடங்கிய உரையாடல் படிப்படியாக அதிகரித்து காதலாக மாறியுள்ளது. அதாவது 'காஜல் பர்மார்' அந்த பெண் அவரை ஒரு காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். இது தெரியாமல் அவர் அந்த அப்பெண்ணிடம் பேசிவந்துள்ளார்.

பின்னர் அந்தப் பெண், காணொளி அழைப்புகள் (Video call) மூலம் அவரைத் தொடர்புகொண்டு, ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசுவது போல் நடித்து, அதேயே ஒரு காரணமாக சொல்லி அந்த இளைஞரை நவம்பர் 4 அன்று தேசிய நெடுஞ்சாலைக்கு எதிரே அமைந்துள்ள 'ஃபன் ஹோட்டலில்' சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அதன் பின்னர் மறுநாள், 'காஜல் பர்மார்' என்று அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண் அந்த இளைஞரை தொலைபேசியில் அழைத்து, தங்கள் சந்திப்பு பற்றித் தனது சகோதரனுக்குத் தெரிந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அவர்கள் ஒரு சமரசத்திற்கு வர வேண்டும் என்றும் அந்த பெண் அந்த இளைஞரிடம் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, கிஷன் என்ற ராஜுபாய் முச்சடியா என்பவர், அந்த பெண்ணின் சகோதரர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த ஆணைத் தொலைபேசியில் அழைத்து சந்திக்குமாறு கேட்டுள்ளார். அந்த சந்திப்பில், ராஜு, தேஜஸ் மற்றும் பாவேஷ் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள், சமரசம் என்ற பெயரில் அந்த இளைஞரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை தரும்படி மிரட்டியுள்ளனர். பின்னர் அந்தத் தொகை படிப்படியான பேச்சுவார்த்தைக்கு பின்னர், 12 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த இளைஞர் பணத்தைச் செலுத்தத் தவறியுள்ளார். இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரது வீட்டிற்கே சென்று அவரைத் தொடர்ந்து மிரட்டியும், பணம் பறித்தும் வந்துள்ளனர். ஒருகட்டத்தில் அந்த இளைஞர் காவல்துறையை அணுகி ஐந்து பேர் மீதும் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரினைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி, ராஜூபாய் என்ற கிஷன் முச்சாடியா, தேஜோ பதாரியா என்ற தேஜஸ்பாய், பீம்ஜிபாய் பர்மர் மற்றும் காஜல்பென் பர்மர் என்ற நான்கு குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர். மேலும், பாவேஷ் கஞ்சரியா என அடையாளம் காணப்பட்ட ஐந்தாவது குற்றவாளியைக் கைது செய்வதற்கான நடவடிக்கையையும் போலீசார் தற்போது தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.