தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் மாவட்டம் மீர்பேட் சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான நாராயணா. ஒடிஷாவை சேர்ந்த இவர் அதே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பந்தித்தா என்ற பெண்ணை கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டிருக்கிறார், பின்னர் இருவரும் சேர்ந்து மீர்பேட்டில் குடியேறி இருக்கின்றனர். நாராயணா பிளமிங் வேலை பார்த்து வந்த நிலையில் பந்தித்தா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நாராயணா மற்றும் பந்தித்தா தம்பதிக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில் பந்திதாவிற்கு அவர்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 25 வயதுடைய வித்யாசாகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த நாராயணா தனது மனைவியை கண்டித்து குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து சேர்ந்து வாழ்வோம் என கூறியிருக்கிறார்.
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் பந்தித்தா தனது காதலனுக்கு போன் செய்து “என்னை ரொம்ப டார்ச்சர் பண்ற என் புருஷனை கொன்னுட்டு நம்ம வாழலாம்” என வித்யா சாகருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த (ஜன 01)ஆம் தேதி இரவு வேலை முடிந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நாராயணாவை இருவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்து கொலை செய்திருக்கின்றனர். பின்னர் காவல் நிலையத்திற்கு போன் செய்த பந்தித்தா போலீசாரிடம் “வீட்டிற்கு திருட வந்தவர்கள் கணவனை அடித்து கொலை செய்து விட்டனர்” என தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பந்திதாவிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்பின்னாக பதிலளித்திருக்கிறார். மேலும் போலீசார் விசாரணையில் இருந்து தப்பிக்க முயற்சித்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்ட போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்ததாக பந்தித்தா தெரிவித்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பந்தித்தா மற்றும் வித்யா சாகர் இருவரையும் கைது செய்து நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.