“கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்த மனைவி” - 9 நாட்களுக்கு மீட்கப்பட்ட அழுகிய உடல்.. ஜேசிபி வைத்து நோண்டப்பட்ட சவக்குழி!

முத்யம் ரெட்டியின் சொந்த நிலத்திலேயே ஜேசிபியை வைத்து குழி தோண்டி புதைத்திருக்கிறார்...
chintu and kalpana with mutya reddy
chintu and kalpana with mutya reddy
Published on
Updated on
2 min read

தெலுங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டம் கங்காபூரை சேர்ந்தவர் 42 வயதுடைய முத்யம் ரெட்டி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கல்பனா என்பவருக்கும் 12 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. முத்யம் ரெட்டி எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த நிலையில் கல்பனா அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இருவரும் பள்ளியில் படித்து வருவதாக சொல்லப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் கல்பனாவிற்கு உடன் பணிபுரியும் சிண்ட்டு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இருவரும் கள்ளத் தொடர்பில் இருந்த நிலையில் அடிக்கடி வெளியில் சுற்றி திரிந்துள்ளார். எனவே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து முத்யம் ரெட்டி அவரை கண்காணித்ததில் கல்பனா சிண்ட்டு உடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக கணவன் மனைவி இருவரும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு முத்யம் ரெட்டி கல்பனாவை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கல்பனா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்த கல்பனா அதற்கு தடையாக இருக்கும் கணவனை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி கடந்த 16 ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டில் உறங்கி கொண்டிருந்த முத்யம் ரெட்டியை, கல்பனா மற்றும் அவரது காதலன் சிண்ட்டு சேர்ந்து சரமாரியாக அடித்து கொலை செய்திருக்கின்றனர். பின்னர் அவரது உடலை முத்யம் ரெட்டியின் சொந்த நிலத்திலேயே ஜேசிபியை வைத்து குழி தோண்டி புதைத்திருக்கிறார்.

பின்னர் மறுநாள் காலை எதுவும் தெரியாதது போல கணவனை காணவில்லை என கூறி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் மற்றும் முடியம் ரெட்டியி உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் அவர் கடைசியாக வீட்டிற்கு சென்றது அப்பகுதி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. எனவே சந்தேகமடைந்த போலீசார் கல்பனாவை காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து நிலத்தில் புதைத்து தெரியவந்தது.

தொடர்ந்து கல்பனா கொடுத்த தகவலின் படி நிலத்தில் புதைக்கப்பட்ட முத்யம் ரெட்டியின் உடலை தோண்டி எடுத்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கல்பனா மற்றும் சிண்ட்டு ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ள தொடர்பில் இருந்த மனைவி காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து நிலத்தில் புதைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com