பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் பயங்கரம் - தான் பெற்ற 3 குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தந்தையாழ் பரபரப்பு..
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (38) இவரது மனைவி நித்யா (35) இவர்களுக்கு ஓவியா (11), கீர்த்தி (8) என்ற 2 மகள்களும், ஈஸ்வர் (5) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நித்யா, கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு வேறு ஒரு நபருடன் சென்றதாக கூறப்படுகிறது. தற்போது வினோத்குமார் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனோடு மதுக்கூரில் உள்ள ஒரு காலணி வீட்டில் வசித்து வருகிறார்.
மனைவி பிரிந்த ஆத்திரத்தில் மதுபோதைக்கு அடிமையான வினோத்குமார், குழந்தைகளை வெறுத்து அவர்களை அடிக்கடி திட்டி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த வினோத் குமார், தனது மகள் ஓவியா, கீர்த்தி ஆகியோரை வீட்டில் இருந்து வெளியே விளையாடவும், தண்ணீர் எடுத்து வரவும் கூறியுள்ளார்.
பிறகு, ஈஸ்வரனை கொஞ்சுவது போல, துாக்கி வைத்து, அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து, இரண்டு மகளையும் அடுத்தடுத்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன்பிறகு, மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.