
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற தேசிய சப் ஜூனியர் கூடைப்பந்து விளையாட்டுத் தொடருக்காகக் கடந்த வாரம் உத்தரகாண்ட் சென்றிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா கூறியதாவது பொதுவாக நமது வீட்டில் மிகப் பெரிய இழப்பு ஏற்படும் போது 16 நாள் துக்க நாளாக வலியோடு இருப்போம். இன்றைக்கு தலைவரும், தமிழக வெற்றி கழகத் தோழர்களும் எங்களது உறவுகள் இறந்து நாளையுடன் 14வது நாள்.
16 நாள் காரியம் முடியும்வரை யாரும் பேசமுடியாத அளவு வலியுடன் உள்ளோம். இதில் எங்களின் நியாயங்களை சொல்லவும், எங்க மீது சொல்லப்படும் அவதூறுகளுக்கு பதில் சொல்வதற்கோ எங்களின் இந்த வலி மிகுந்த நாள்களுடன், 41 உறவுகளின் வலியுடன் அவர்களுடன் கடந்து கொண்டிருக்கிறோம்.
16 நாள் காரியம் முடியும் வரை எங்களது முடிவு எந்தவித அரசியலோ, அல்லது எங்கள் மீது வரும் அவதூறுகளோ, தவறான செய்திகளைப் பரப்பும் போது நாங்கள் பதில் சொல்லாதது எங்களது மக்களுக்காக அவர்களுடன் இருந்து கொண்டிருக்கிறோம்.
16 நாள் காரியம் முடிந்த பிறகு என்ன உண்மைகளோ, அந்த உண்மைகளை கண்டிப்பாக சொல்லுவோம். அதற்கிடையில் எங்களது கட்சியின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி எங்கள் நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கைகள்.
இந்த இழப்பால் நாங்கள் அமைதியாக எங்கள் மக்களுடன் இருக்கும்போது, இந்தக் கட்சியை முடக்க வேண்டும் என்று நினைக்கும்போது, சாமானிய மனிதனின் நம்பிக்கையாக நீதித்துறையை நாடி உண்மையைக் கொண்டு வருவதற்காக எங்களது போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
வலி மிகுந்த நாட்களுடன் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். அவர்களைச் சந்திப்பதற்கான பயணத்திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். 16 நாள் முடிந்தவுடன் மற்றவற்றை பேசுவோம்.
டெல்லியில் மூன்று நாட்களாக பத்திரிக்கையாளர்கள் வீட்டின் முன்பு காத்திருந்தார்கள். அவர்களைச் சந்திக்க முடியவில்லை, அதற்கு மன்னிப்பு கேட்கிறேன்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்காக ஒரு சாமானிய மனிதராக நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம். உண்மை வெளியில் வரும்.
கட்சியின் மாவட்ட செயலாளர்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டு கடுமையாக கைது செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை சட்டத்தின் படி வெளிக்கொண்டு வரவேண்டும், அதற்கான பணிகள் இருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.