10 மாதங்களாக கழிவறையில் அடைத்த கொடூரம்! "பாட்டில் மற்றும் குச்சியால் மருமகளின் அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய அவலம்" - வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

பாட்டில்கள் மற்றும் குச்சிகளால் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் தாக்கப்பட்டதாகவும், குழந்தைகளுக்கு தாய் பால் கூட கொடுக்க அனுமதிக்கவில்லை
Dehradun crime news
Dehradun crime newsDehradun crime news
Published on
Updated on
2 min read

டேராடூனில் நடந்த அதிர்ச்சிகரமான குடும்ப வன்முறைச் சம்பவத்தில், ஒரு பெண் தனது மாமியார் வீட்டாரால் 10 மாதங்களாக ஒரு அறையிலும், கழிப்பறையிலும் அடைத்து வைக்கப்பட்டு, பலமுறை சித்திரவதை செய்யப்பட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

இராணுவ வீரரான பெண்ணின் தந்தைக்கு இடைத்தரகர் மூலம் ஒரு வரன் வந்துள்ளது. 32 வயதான ஒருவருக்கு திருமணம் செய்துள்ளனர். மேலும், பெண்ணின் பெற்றோர் இதை ஒரு நல்ல சம்பந்தம் என்று அப்போது நினைத்துள்ளனர். அதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு 2025 பிப்ரவரியில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அவரது கணவர் டெல்லியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தபோது, ​​அந்தப் பெண் அவரது மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அங்குதான் அந்த பெண்ணுக்கு கொடுமை நிகழ ஆரம்பித்துள்ளது. அந்த பெண்ணுக்கு மாமியார் வீட்டார் வெறும் பச்சரிசியை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்ததாக கொடுத்துள்ளனர். மேலும், பாட்டில்கள் மற்றும் குச்சிகளால் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் தாக்கப்பட்டதாகவும், குழந்தைகளுக்கு தாய் பால் கூட கொடுக்க அனுமதிக்கவில்லை என்றும் அவரது தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், அப்பெண்ணின் கணவர் ராகுல் கந்துரி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜூலை மாதம் முதல், அவள் ஒரு தனி அறை மற்றும் கழிப்பறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவரது மாமியார் வீட்டார் அந்த பெண்ணை தொடர்ந்து உடல்ரீதியாகத் துன்புறுத்தி சித்திரவதை செய்ததாகவும் அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளார். ந்த பெண்ணின் கணவர் விடுமுறையில் வீடு திரும்பும்போதெல்லாம் அவரை உடல்ரீதியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. அவருக்குச் சாப்பிட சரியாக வேகாத சோற்றையும், வெங்காயம் மற்றும் மிளகாய் கொடுக்கப்பட்டதாகவும், இந்தத் தொடர்ச்சியான துன்புறுத்தல் தனது மகளின் மனநலத்தைப் பாதித்ததாகவும் அந்த பெண்ணின் தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாமனார், மாமியாரால் அப்பெண் துன்புறுத்தப்பட்டதாகவும், கழிவுநீர் குழாய்கள், கம்பிகள், நாற்காலிகள் மற்றும் தரை துடைப்பான்களைக் கொண்டு அவர் தாக்கப்பட்டதாக அப்பெண்ணின் தந்தை தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் அப்பெண்ணின் தலையிலிருந்து முடியை பிடுங்கியதால், உச்சந்தலையில் சில இடைவெளிகள் தெரிந்துள்ளன. இந்த 10 மாதங்களாக, தனது மகள் தன் குடும்பத்தினரைச் சந்திக்கவோ அல்லது தொலைபேசியில் பேசவோ அனுமதிக்கப்படவில்லை என்றும் அந்த பெண்ணின் தந்தை குற்றம் சாட்டினார். அந்த பெண்ணின் மாமியார் வீட்டார், தங்கள் பேரக்குழந்தைகளைச் சந்திக்கவும் அவர்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் தங்கள் மகளுடன் பேச நினைத்து தொடர்பு கொள்ளும்போதெல்லாம், "அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள் அல்லது குளித்துக்கொண்டிருக்கிறாள்" என்பதே அவருடைய மாமியார் வீட்டார் கூறும் வழக்கமான பதிலாக இருக்கும் என்று பெண்ணின் தந்தை கூறினார்.

இதனையடுத்து உண்மையை அறிய அப்பெண்ணின் பெற்றோர் தங்களது மகளின் மாமியார் வீட்டிற்குள் நுழையவும் தங்களை அனுமதிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். இதனையடுத்து உள்ளே நுழைந்த பெற்றோர் தங்களின் மகளின் கோலத்தை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com