“என்னை விட்டுட்டு.. இங்க எவன் கூட வாழுற” - கள்ளத்தொடர்பை மறைக்க மனைவி மீது பழி போட்ட கணவன்.. அடுத்து செய்த கொடூர கொலையின் பின்னணி!

சித்ரா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாலே தன்னுடன் வாழ மறுப்பு தெரிவித்து வருவதாக...
wife and husband
wife and husband
Published on
Updated on
2 min read

சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் சேர்ந்தவர் 38 வயதுடைய சரவணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சித்ரா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 14 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சரவணன் கூலித்தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் நாளடைவில் வீட்டு செலவிற்கு பணம் தருவதை குறைத்து வந்திருக்கிறார். மேலும் மூன்று இரண்டு நாட்கள் வீட்டிற்கு வராமல் வெளியே தங்கி விடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த சித்ரா தனது கணவரை செயல்பாடுகளை கண்காணித்த போது அவர் அதே கிராமத்தில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து சித்ரா சரவணனிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கணவனை பிரிந்து வாழ நினைத்த சித்ரா தனது குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டிற்கு அருகே வடக்கை வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். அப்போதும் மனைவியை விடாத சரவணன் தினந்தோறும் சித்ரா தங்கியுள்ள வீட்டிற்கு சென்று அவரிடம் வாக்குவாதம் செய்து வந்திருக்கிறார். மேலும் சித்ரா பணிபுரியும் கம்பெனிக்கு சென்று அவரை தொல்லை செய்து வந்திருக்கிறார். இருப்பினும் சித்ரா அவரது முடிவில் உறுதியா இருந்த நிலையில் ஆத்திரமடைந்த சரவணன் உறவினர்களிடையே சித்ரா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாலே தன்னுடன் வாழ மறுப்பு தெரிவித்து வருவதாக கூறி வந்திருக்கிறார்.

Admin

தொடர்ந்து சித்ராவின் வீட்டிற்கு சண்டையிட செல்லும் போது எல்லாம் “என்னை விட்டுட்டு இங்க எவன் கூட வாழுற” என கேட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இதில் ஆத்திரமடைந்த சரவணன் தனது மனைவி சித்ராவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினார். குழந்தைகள் இருவரும் காலையில் எழுந்து பார்க்கும் பொழுது தனது தாய் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் அக்கம் பக்கத்தினரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆத்தூர் டி.எஸ்.பி. சத்யராஜ் நேரில் வந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கழுத்தில் காயம் இருந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் சரவணன் ஆத்தூர் காவல் நிலையத்தில் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்துள்ளார்.மேலும் போலீசாரிடமும் விசாரணையில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் கொலை செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். கணவன் மனைவியை குழந்தைகள் கண் முன்னே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com