துப்பாக்கி முனையில் மருமகளை சீரழித்த மாமனார்! "யாருகிட்டயும் இது பற்றி பேசக்கூடாது" - மிரட்டிய கணவன் - மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததா?

கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தபோது, ​​மாமனார் தன்னைத் துன்புறுத்தவும் பாலியல் ரீதியாகத் தாக்கவும தொடங்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Father-in-law rape case
Father-in-law rape caseFather-in-law rape case
Published on
Updated on
1 min read

திருமணமான ஒரு பெண்ணை அவரது மாமனார் துப்பாக்கி முனையில் தன்னை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதே நேரத்தில் அவரது கணவர் தன்னை மௌனமாக இருக்குமாறு மிரட்டியதாகவும், குற்றம் சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்ட காவல்துறை, அப்பெண்ணின் மாமியார் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தனர். லக்னோவைச் சேர்ந்த அந்தப் பெண் தனது புகாரில், இஸ்லாமிய வழக்கப்படி 2023-ம் ஆண்டு ரூபைதேஹா நகரின் முஸ்லிம் பாக் பகுதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். திருமணத்தின் ஆரம்ப ஆண்டுகள் அமைதியாக, சந்தோசமாக இருந்துள்ளது. ஆனால் பின்னர் தனது கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தபோது, ​​மாமனார் தன்னைத் துன்புறுத்தவும் பாலியல் ரீதியாகத் தாக்கவும தொடங்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி அந்த பெண்ணை மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறிஉள்ளர். மேலும், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இந்தத் தாக்குதல்கள் குறித்துத் தனது கணவரிடம் தெரிவித்தபோது, ​​அவர் தன்னை மிரட்டியதோடு, இதுபற்றி யாரிடமும் பேசக்கூடாது என்றும் எச்சரித்ததாக அதிர்ச்சி தகவலை அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சமீபத்திய சம்பவம் நடந்ததாக அப்பெண் கூறினார். மாமனார் அந்த இப்பண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் போது என்று அவர் கூச்சலிட்டபோது, ​​அவரது மாமியார், மைத்துனர் மற்றும் நாத்தனார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணுக்கு உதவுவதற்குப் பதிலாக அவரைத் தாக்கியுள்ளனர்.

பின்னர் அந்த பெண் தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியதை அடுத்து, அவரின் கணவன் தொலைபேசியில் மூன்று முறை தலாக் கூறி உறவை முறித்துக்கொண்டுள்ளார். புகாரின் அடிப்படையில், கணவர், மாமனார், மாமியார், மைத்துனர் மற்றும் நாத்தனார் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணையின் போது அந்த பெண்ணின் கணவர், அந்தப் பெண் வேறொருவருடன் உறவில் இருப்பதாகவும், அந்த விவகாரம் தொடர்பாக தம்பதியினருக்குள் தகராறுகள் இருந்து வருவதாகவும் தெரிவித்ததாக ரூபைதேஹா காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் ராவத் கூறினார். "இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. விசாரணையின் போது வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று ராவத் கூறினார். மேலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com