“80 வயது மூதாட்டியை கொன்று பாலியல் வன்கொடுமை” - தனியாக மீன் விற்றவருக்கு நடந்த கொடுமை.. தலை நசுங்கிய சடலத்துடன் போய் இப்படியா?

அதற்கு மூதாட்டி ஒத்துழைக்காததால் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு...
ramasami and chinna ponnu body
ramasami and chinna ponnu body
Published on
Updated on
2 min read

நாகப்பட்டினம் மாவட்டம், அண்ணாசிலை அமைந்துள்ள நகரின் மையப் பகுதி அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே 80 வயது நிறைந்த மூதாட்டி ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது கிடப்பதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த மூதாட்டியின் உடலை ஆய்வு செய்த போது இறந்த கிடந்த மூதாட்டியின் முகம் நாய் கடித்து சிதைந்து இருப்பது போல தெரியவந்தது.இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்த மூதாட்டி நாகப்பட்டினம் வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த 80 வயதுடைய சின்னப்பொண்ணு என்பதும், அவர் அப்பகுதியிலேயே தங்கி நீண்ட காலமாக மீன் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதால் மூதாட்டியின் முகத்தை நாய் கடித்து குதறியதா? அல்லது இயற்கையாக இறந்த பின்னர் நாய் கடித்து குதறியதா? என அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த முதியவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Admin

அதில் அந்த முதியவர் நாகப்பட்டினம் சட்டையப்பர் வீதியில் உள்ள தனியார் ஹோம் தங்கி மீன் வியாபாரம் செய்வது தெரியவந்தது. மேலும் ராமசாமி மீன் வாங்க வரும் போது மூதாட்டி சின்னபொண்ணுவிடம் அவ்வப்போது இரட்டை அர்த்தத்தில் பேசி வந்ததும் தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் மூதாட்டி தனியாக இருப்பதை கவனித்த ராமசாமி சின்ன பொண்ணுவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முயற்சித்துள்ளார். அதற்கு மூதாட்டி ஒத்துழைக்காததால் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு. பலாத்காரம் செய்தது விசாரணையில் வெளிவந்துள்ளது.

இதை தொடர்ந்து ராமசாமியை கைது செய்த போலீசார் அவரை நேற்று (10 ம் தேதி) நாகப்பட்டினம் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி ராமசாமியை வரும் 24ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் நாகப்பட்டினம் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். தனியாக மீன் வியாபாரம் செய்து வந்த மூதாட்டியை கொன்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com