பள்ளி வளாகத்தில் கள்ளக்காதலனுடன் உடலுறவு… வீடியோவாக பதிவு செய்த பெண்! மாணவர்கள் முன்னே அரங்கேறிய அதிர்ச்சி!

காவல்துறை அதிகாரியுடன் குறைந்தது நான்கு முறை பள்ளி வளாகத்திற்குள்ளேயே...
Crime news
Crime news
Published on
Updated on
2 min read

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்த திருமணமான பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், தான் பணியாற்றிய நடுநிலைப் பள்ளிக்குள்ளேயே சக காவலருடன் பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டு, அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற உள்துறை விசாரணைக்குப் பிறகு, அந்த பெண் காவலர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள மெட்ரோ நாஷ்வில் காவல்துறையில் பணியாற்றிய லிசா விட்ரியோஸ் (37) என்பவர், 2025-ஆம் ஆண்டு மே மாதத்தில் மேடிசன் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தார். மாணவர்களின் பாதுகாப்பு, பள்ளி வளாகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரித்தல் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை அவர் வகித்து வந்தார். இந்நிலையில், தொழில்முறை பொறுப்புக்கூறல் அலுவலகம் மேற்கொண்ட விசாரணையில், லிசா விட்ரியோஸ் தனது கணவர் அல்லாத மற்றொரு காவல்துறை அதிகாரியுடன் குறைந்தது நான்கு முறை பள்ளி வளாகத்திற்குள்ளேயே பாலியல் உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் கைப்பற்றப்பட்ட அவரது செல்போனில் இருந்த வீடியோக்கள் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்தன. அந்த வீடியோவில், பள்ளிக்குள் உள்ள தனது அலுவலகத்தில் இருந்த சோபாவில் சக காவலருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகியிருந்தன. மேலும், அந்த சம்பவம் நடந்த நேரத்தில் பள்ளி கட்டிடத்திற்குள் மாணவர்கள் இருந்ததோடு, அலுவலக கதவுக்கு வெளியே ஊழியர்கள் பேசிக்கொண்டிருந்த சத்தமும் வீடியோவில் பதிவாகியிருந்ததாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், பள்ளி வளாகத்திற்கு வெளியேயும் இருவரின் தொடர்பு தொடர்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றொரு காவல்துறை அதிகாரியின் ரோந்து வாகனத்தில், அவர்கள் பணியில் இருந்தபோதே குறைந்தது இரண்டு முறை பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதில் ஒரு சம்பவம் கைவிடப்பட்ட மருத்துவமனை வளாகத்தில் வாகன நிறுத்துமிடத்தில் நடைபெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லிசா விட்ரியோஸ் காவல்துறையில் சேர்வதற்கு முன்பு அமெரிக்க கடற்படையில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியவர். 2022-ஆம் ஆண்டு, தனது காவல்துறை அதிகாரியான கணவருடன் சேர்ந்து சான் டியாகோவில் இருந்து நாஷ்வில்லுக்கு குடிபெயர்ந்தார். இருவரும் ஒன்றாக மெட்ரோ நாஷ்வில் காவல்துறை பயிற்சி அகாடமியில் பட்டம் பெற்ற முதல் தம்பதியர் என்ற பெருமையையும் பெற்றிருந்தனர். பட்டமளிப்பு விழாவில், பயிற்சி வகுப்பின் சார்பில் உரையாற்றும் வாய்ப்பு லிசாவுக்கு வழங்கப்பட்டது. மேலும், காவல்துறையின் விளம்பரக் காணொளியிலும் அவர் இடம்பெற்று, "என் கணவரும் நானும் காவல்துறையில் பணியாற்றுகிறோம். எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை மிகவும் விரும்புகிறோம்" என்று பெருமையாக பேசியிருந்தார்.

இந்த விவகாரம் 2025 மே மாதத்திலேயே காவல்துறையின் கவனத்திற்கு வந்தது. குற்றச்சாட்டுகள் உறுதியானதைத் தொடர்ந்து, மே 26, 2025 அன்று லிசா விட்ரியோஸும், அவருடன் தொடர்பில் இருந்த காவல்துறை அதிகாரியும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டு, காவல்துறையின் அனைத்து அதிகாரப்பூர்வ அணுகல் உரிமைகளும் ரத்து செய்யப்பட்டன.

விசாரணையின் போது, பணியில் இருந்தபோது முறையற்ற பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டது மற்றும் அதிகாரிக்கு ஒவ்வாத நடத்தையில் ஈடுபட்டது உள்ளிட்ட விதிமீறல்களை லிசா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 30 நாட்கள் இடைநீக்க தண்டனையை ஏற்றுக்கொண்ட அவர், பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றொரு காவல்துறை அதிகாரி, 18 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் என்றும், 2026-ஆம் ஆண்டு பணியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வூதியம் பெற்றதால், அவரிடம் முழுமையான விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியே பள்ளி வளாகத்திற்குள் இவ்வாறு நடந்துகொண்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் ஒழுக்கம், பள்ளி பாதுகாப்பு மற்றும் பொது நம்பிக்கை குறித்து இந்த விவகாரம் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com