

இராஜமங்கலம் பகுதியில் தனியார் ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட லேப் டெக்னீஷியன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சமூகத்தில் குடும்பம் , வேலை பார்க்கும் இடம், பள்ளி, கல்லூரி, ஏன் சமயங்களில் கோவில்களுக்குள்ளும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எத்தனையோ போராட்டங்களும் சட்டங்களும் வகுக்கப்பட்டாலும், பெண்கள் இன்னும் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றனர்.
அதற்கு சமீபத்திய உதாரணம்தான் சென்னையில் நடந்துள்ளது. சென்னை, புழல், காவாங்கரையைச் சேர்ந்த 47 வயது பெண்மணி ஒருவர் தனக்கு அதீத வயிற்று வலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமரை அணுகி உள்ளார்.
அவரை பரிசோதித்துவிட்டு, MRI ஸ்கேன் எடுக்க வேண்டும் என பரிந்துரைத்து கடிதம் கொடுத்துள்ளார் மருத்துவர்., இந்நிலையில் அந்த பெண்மணி தனது மகளுடன் 06.12.2025 அன்று மாலை, கொளத்தூர், ரெட்டேரி அருகிலிருக்கும் தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்றுள்ளார். பணம் செலுத்திவிட்டு, ஸ்கேன் அறைக்கு சென்ற அவரை, அங்கிருந்த ஆண் லேப் டெக்னீஷியன் அப்பெண்மணியை ஸ்கேன் மேடையில் படுக்கச் சொல்லி, பெண்ணின் உடைகளை சரிபடுத்துவது போல களைந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும், இதனால் கோபமடைந்த அப்பெண்மணி அங்கிருந்த கிளம்பி உள்ளார். பின்னர் ஸ்கேன் மையத்தில் புகார் தெரிவித்துவிட்டு, மேற்படி ஸ்கேன் மைய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி V-4 இராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
V-4 இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஜில்கவின், என்பவரை கைது செய்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.