

இந்திய சமூகம் நாளுக்கு நாள் வன்முறைகளால் நிரம்பி வழிந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கள்ளக்காதல் சம்பவங்களால் ஏற்படும் கொலைகள் பெருகி வருகிறது. ஒழுக்க முரண் மற்றும் உளவியல் ரீதியான சிக்கல்களைத்தான் இது வெளிப்படுத்துகிறது. ஆனால் இவை அனைத்தும் அடிப்படையில் பணத்தை மையமாக வைத்துதான் இயங்குகிறது என்றே சொல்ல வேண்டும். திருமணத்தை மீறிய உறவு என்றாலும், அதற்கு வெறும் காதல் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. பெரும்பான்மையான நேரங்களில் பணத்தையும், உடல் ரீதியான தேவைகளும் பிரதானமாக அமைகின்றன. அந்த அளவுக்கு கீழாக மனித மனங்கள் மலிந்துவிட்டன என்பதே சோகம்.
அப்படி ஒரு சம்பவம்தான் உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் சீதா. இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் இவரது கணவர் பால் வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறார். சீதாவின் கணவர் காலையில் 5 மணிக்கு வியாபாரத்திற்கு சென்றால் திரும்பி வர 10 -ஆகி விடும். மேலும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சூழலில்தான் எதிர்வீட்டில் வசிக்கும் மோஹித் என்ற நபருடன் பேச ஆரம்பித்துள்ளார் சீதா. ஆரம்பித்தில் வெறும் பேச்சு வார்த்தையில் இருந்த இவர்களின் பழக்கம், நாளடைவில் தகாத உருவாக மாறியுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் தனிமையில் சந்திப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஒருகட்டத்தில் இந்த விஷயம், சீதாவின் கணவருக்கு தெரிய வரவே, அவர் மனைவியை சரமாரியாக தாக்கி கண்டித்துள்ளார்.
இதற்கிடையில் கணவனிடம் இருந்து எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று நினைத்த சீதா, மோஹித்திடம், “நாம் இங்கிருந்து சென்றுவிடுவோம். உன் மனைவியை விட்டு விட்டு வந்துவிடு” என தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் மோஹித் ஒரு மோசமான திட்டத்தை தீட்டியுள்ளார். தனக்கும் எதிர்வீட்டு பெண்ணுக்குமான உறவை குறித்து தனது மனைவி உடன் பேசிய மோஹித், “சீதா என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயல்கிறாள். ஆனால் அவள் பணக்காரி, அவளை கொன்றுவிட்டு அவள் வீட்டில் உள்ள நகை, பணத்தை எடுத்துக்கொண்டு, எங்காவது சென்று சந்தோசமாக வாழலாம்” என யோசனை கொடுத்துள்ளார். கணவனின் இந்த மோசமான யோசனைக்கு ஒப்புக்கொண்ட மோஹித் மனைவி சீதாவை கொள்ள சமையம் பார்த்துக்கொண்டிருந்தார்.
அன்று வழக்கம் போல சீதாவின் கணவர் பால் வியாபாரத்திற்கு அதிகாலையிலே சென்றுவிட, மொஹிதீன் மனைவி சீதாவிடம் சென்று பேச்சுக்கொடுத்துள்ளார். அப்போது பின் வாசல் வழியாக வந்த மோஹித் சீதாவை சரமாரியான குத்தி கொன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிய இருவரும் பக்கத்து கிராமத்தில் பதுங்கியுள்ளனர். வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய கணவன் மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியில் மூழ்கினார்.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
விசாரணையை துவங்கிய போலீசார் எதிர் வீட்டில் இருந்த ஜோடி, திடீரென காணாமல் போனதை அறிந்து, விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர். மேலும் சுற்றியிருந்த இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் அருகில் இருந்த காட்டில் சில துணிகள் கிடைத்துள்ளன. அந்த துணிகள் மோஹித் மற்றும் அவரது மனைவியுடையது தான் என் அக்கம் பக்கத்தினர் கூறியதை அடுத்து, அவர்கள் இருவரின் தொலைபேசி எண்ணை டிரேஸ் செய்து, பக்கத்து கிராமத்தில் இருந்த இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்ததில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பால் வியாபாரி மனைவி குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.