“விஜய்க்கு சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனை இருக்கு..” அவரை ஒரு கூட்டமே இயக்குகிறது!? -செல்வகுமார் பேசியதன் பின்னணி இதுதானா!

இவ்வளவு ஏன்? அவர் தந்தை எஸ்.ஏ.சி மகனை பார்க்க வேண்டும் என்றால் கூட, அப்பாய்ண்ட்மென்ட் வாங்கிக்கொண்டுதான் ...
vijay with pt selvakumar
vijay with pt selvakumar
Published on
Updated on
2 min read

தமிழக அரசியல் நாளுக்கு நாள் புதுப்புது பரிணாமத்தை சந்தித்து வருகிறது. ஆனாழும், இன்னும் பல காட்சிகளில் தொகுத்து பங்கீடுகள் ஆரம்பிக்கவே இல்லை. கட்சிகளின் கூட்டணி கணக்குகள் தான் மக்களை பெரிதும் அலைக்கழிக்கின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத்தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. 

விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்குபோல  காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.

அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்திதான் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர்க வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர்.  இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும்,  இந்த துயர சம்பவத்திற்கு பிறகு தவெக தலைதூக்குவது கடினம் இது விஜய்க்கு நிச்சயம் பின்னடைவு என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் கரூர் சம்பவம் ஆளுங்கட்சியான திமுக -வுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தியது ஒழிய பாதிக்கப்பட்டவர்கள்  உட்பட யாரும் விஜய் மீது கோவத்தை வெளிப்படுத்தவில்லை. 

இதற்கிடையில் அதிமுக -விலிருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன், விஜய் கட்சியில் இணைந்தது தமிழக வெற்றி கழகத்திற்கு ஏறுமுகமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் திராவிட சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத் நேற்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துவிட்டார். ஓரளவுக்கு தங்களின் பிரச்சனைகளில் இருந்து தவெக மீண்டுவிட்டது எனவே சொல்ல வேண்டும். 

விஜய் மீதான விமர்சனங்கள்!!

அவரது அரசியல் பிரவேசம் உண்மையில் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.  விஜய் ‘work from home’ அரசியல் செய்கிறார், என பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது. மேலும், கவின் ஆணவப்படுகொலை, திருப்பரங்குன்றம், உள்ளிட்ட பல பிரச்சனைகளில் விஜய் மவுனம் காத்து வந்தது அவர் மீதான அதிருப்தியை மேலும் அதிகப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். மேலும், விஜய் ஏதோ ஒரு நிர்பந்தத்தில்தான் கட்சி துவங்கினார் என்ற பேச்சுக்கள் தொடர்ந்து உலவி வந்தன.

இந்த சூழலில் விஜயை ஒரு கூட்டமே இயக்குகிறது என அரசியல் விமர்சகர் சுபேர் பேசியுள்ளார், தனியார் யூடியூப் சேனலில் பேசிய அவர் “விஜய்க்கு சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது, நாகரிகம் கருதி சில விஷயங்களை நாம் பொது வெளியில் பேசவில்லை. ஆனால் சிறிது காலம் கழித்து அவை அனைத்தும் வெளியில் வரும். 

இவ்வளவு ஏன் அவர் தந்தை எஸ்.ஏ.சி மகனை பார்க்க வேண்டும் என்றால் கூட, அப்பாய்ண்ட்மென்ட் வாங்கிக்கொண்டுதான் போக வேண்டும். சமீபத்தில் திமுக -வில் இணைந்த விஜய் -ன் பல நாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் மனம் நொந்து பேசியிருப்பதை பார்த்திருப்பீர்கள். விஜய் -ன் ஆரம்பகால வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. பல வெற்றிப்பட வாய்ப்பை விஜய்க்கு ஏற்படுத்தி தந்தவர் செல்வகுமார், அதற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு, “துள்ளாத மனமும் துள்ளும்” அது பிரஷாந்த் நடிக்கவிருந்த படம் அந்த வாய்ப்பை விஜய்க்கு பெற்று தந்தார்.

ஆனால் விஜய் தனது ஆரம்பகால வாழ்வில் துணை நின்ற அனைவரையும் மறந்துவிட்டார். ஆனால் அவரை ஒரு கூட்டமே இயக்குகிறது என்பதுதான் உண்மை.

மேலும்  நீங்கள் பார்த்தீர்களேயானால் அவர் அரசியலுக்கு ஏற்றவர் அல்ல, “தனிமை, கூச்ச சுபாவம்” இதற்கும் அரசியலுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. அவர் எதோ ஒரு நிர்பந்தத்தில்தான் கட்சி துவங்கியுள்ளார். அவரை ஒரு கூட்டமே இயக்கிக்கொண்டிருக்கிறது. அவர் யார் பேச்சையும் கேட்பதே இல்லை ” என பேசியுள்ளார் 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com