கணவரின் நிர்வாண சடலத்தோடு மனைவி செய்த காரியம்.. நீதிபதியை உறையவைத்த அதிர்ச்சி சம்பவம்!

மூன்று வாரங்களாகத் தன் கணவரின் இறந்த நிர்வாண உடலுக்கு அருகில் உறங்கிய பெண் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கணவரின் சடலத்தோடு இருந்த மனைவி
கணவரின் சடலத்தோடு இருந்த மனைவி கணவரின் சடலத்தோடு இருந்த மனைவி
Published on
Updated on
1 min read

61 வயதான சாலி ஸ்மித்சன், தனது கணவரின் உறைந்த உடலை நிர்வாணமாக்கி அதன் அருகில் 3 வாரம் அருகில் படுத்து உறங்கியுள்ளார். ஒரு உடலைச் சட்டப்பூர்வமாகவும் கண்ணியமாகவும் அடக்கம் செய்வதைத் தடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருடைய துணைவரான 71 வயது ஜான் பிளாக்வெல், கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி அன்று உயிரிழந்துள்ளார். ஆனால், அவரது உடல் அக்டோபர் 21 ஆம் தேதி வரை காவல்துறையினரால் கண்டறியப்படவில்லை. வழக்கறிஞர் சார்லஸ் வார்ட்-ஜாக்சன், பிளாக்வெல்லின் உடல் முற்றிய சிதைவு நிலையில் இருந்ததாக ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிளாக்வெல் கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மாரடைப்பே அவரது மரணத்திற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஸ்மித்சனுக்கும் பிளாக்வெல்லுக்கும் இடையிலான உறவு சற்று "சிக்கலானதாக" இருந்ததாகவும், அதாவது "குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதங்கள் மற்றும் குடும்ப வன்முறை" போன்றவை இருந்ததாக வழக்கறிஞர் கூறியுள்ளார். படுக்கையறைத் தரையில் அவரது உடலை காவல்துறை கண்டெடுத்துள்ளனர். ஜான் பிளாக்வெல் மல்லாந்து படுத்த நிலையில், நிர்வாணமாகக் கிடந்துள்ளார். அவரது உடல் முழுவதும் சிதைந்த நிலையில் இருந்துள்ளது. அவரின் உடலில் காயங்களுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. ஜான் படுக்கையில் கிடந்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக அந்தப் படுக்கையில் நிர்வாணமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து சாலிக்கு, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) அன்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவிக்குள் நிலையற்றதாக இருந்த இந்த உறவில், அவரது கணவரின் உயிரிழப்பு இயற்கை மரணமாகவே இருந்துள்ளது. கிட்டத்தட்ட 3 வாரங்களாக நிர்வாணமான அவரது கணவரின் சடலத்திற்கு அருகில் உறங்கியுள்ளார் என்பது நீதிபதிகள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

இது மிகவும் கடுமையான மற்றும் தீவிரமான குற்றமாகும். இது பொது நாகரிகத்தின் நெறிமுறைகளுக்கு எதிரான அவமதிப்பாகும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்து, ஸ்மித்சனின் வழக்கறிஞரான பீட்டர் டு ஃபியூ, நடந்த எதையும் அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றும் நடந்தவற்றிற்காக அவர் வருந்துவதாகவும் அவர் கூறினார். மேலும், என்ன நடந்தது என்பதை ஆழமாகப் அவர் இப்போதுதான் புரிந்துகொள்ள முயன்றுவருகிறார், உண்மையிலேயே மிகவும் கலக்கமடைந்துள்ளார் என்றும் அவரது வழக்கறிஞர் கூறிள்ளார். தற்போது, ஸ்மித்சனுக்கு 14 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com