
ஹைதராபாத்: அக்டோபர் 13 ஆம் தேதி ஆந்திராவின் ராஜமுந்திரியில் இருந்து ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள செர்லபள்ளிக்கு பயணித்த சாந்த்ரகாச்சி சிறப்பு எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 07222) பெண்கள் பெட்டியில் 25 வயது பெண் ஒருவர் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவரின் உடைமைகள் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குண்டூர் மற்றும் பெடகுரபாடு செல்லும் வழியில் ஓடும் ரயிலில் நடந்ததுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஹைதராபாத்தில் வீடு வேலை செய்துவரும் அவர் சொந்த ஊருக்கு திரும்புகையில் தான் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
அவர் பெண்கள் பெட்டியில் தனிமையில் அமர்ந்துள்ளார். அப்போது சுமார் 40 வயதுடைய ஒரு ஆண் அந்த பெட்டிக்குள் நுழைய முயன்றுள்ளார். ஆனால் அப்போதும் அந்த பெண் இது பெண்கள் இருக்காய் எனக்கூறி அவரை தடுக்க முயன்றுள்ளார். ஆனால் ரயில் வேகமாக நகரத்துவங்கியதால், அந்த ஆள் உள்ளே நுழைவதை அந்த பெண்ணால் தடுக்க முடியவில்லை. அடையாளம் தெரியாத அந்த பெட்டிக்குள் நுழைந்தவுடன், கதவை உள்ளே இருந்து பூட்டி உள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.5,600 பணம் மற்றும் அவருடைய செல்போனை திருடியதோடு மட்டுமல்லாமல், அந்த பெண்ணின் முகத்திலும் உடலிலும் மோசமான காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து குற்றவாளி பெடகுரபாடு ரயில் நிலையத்தை நெருங்கும் போது ரயில் மெதுவாகச் சென்றதால், ரயிலில் இருந்து குதித்து தப்பியோடியதாக சொல்லபடுகிறது.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண் வேறு வழியின்றி செர்லப்பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ளார். இதற்கிடையில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து 14 ஆம் தேதி செகந்திராபாத் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார், அவர்கள் எந்த எஃப்.ஐ.ஆர் பதிவும் செய்யவில்லை. இந்த விவகாரம் மேல் விசாரணைக்காக ஆந்திராவில் உள்ள நாடிகுடி ரயில்வே காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது, குண்டூர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.