
வழக்கறிஞர் ராஜூவ்காந்தி தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு மற்றும் பார்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள பார்கவுன்சில் அலுவகம் முன், கடந்த 7 ம் தேதி விசிக தலைவர் திருமாவளவனின் காரை மறித்ததாக கூறி விசிக வழக்கறிஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜூவ் காந்தி என வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தி அவரின் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினர்.
இந்நிலையில் தமிழ்நாடு,புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் பதற்றமான சூழல் நிலவி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதை கருத்தில் கொண்டு ராஜூவ் காந்தி தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு பார்கவுன்சிலின் இணை தலைவர்கள் அருணாச்சலம், சரவணன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்து உத்தரவிடுவதாகவும்
அக்குழு விசாரணை நடத்தி 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுவரை நீதிமன்ற புறக்கணிப்பு உள்ளிட்ட எந்த போராட்டங்களிலும் வழக்கறிஞர்கள் ஈடுபட வேண்டாம் எனவும் பார்கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.