நான்கு குழந்தைகளை அம்போவென விட்டு... காதலனுடன் சென்ற தாய்! கொலை செய்து நாடகமாடிய வாலிபர்?

ஆம்புலன்ஸ் செவிலியர்கள் வந்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது..
kolathur murder
Published on
Updated on
1 min read

சென்னை, கொளத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் சரண்ராஜ் (வயது 36). கூலி வேலை செய்து வரும் இவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர் திருப்பதி நகரில் வேலை செய்து வந்த முத்துமாரியம்மாள் (38) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். முத்துமாரியம்மாளுக்கு ஏற்கனவே முருகன் என்பவருடன் திருமணமாகி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகள் உள்ள, மூன்று பிள்ளைகளும் தற்போது பல்லாவரத்தில் உள்ள தந்தை முருகனிடம் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், காதல் திருமணம் செய்து கொண்ட சரண்ராஜ் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி  வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவிக்கு அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. நேற்று இரவு வழக்கம் போல குடிபோதையில் வீட்டுக்கு வந்த சரண்ராஜ் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரண்ராஜ் வீட்டில் இருந்து காய்கறி வெட்டும் கத்தியால் முத்துமாரியம்மாளை வலது மார்பில் சரமாரியாக குத்தியுள்ளார்.

கத்தியால் கடுமையாக தாக்கியதால், முத்துமாரியம்மள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். உடனே, சரண்ராஜ் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அழைப்பு விடுத்தார். பின்னர், ஆம்புலன்ஸ் செவிலியர்கள் வந்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. அப்போது தனது மனைவி கீழே விழுந்து இறந்து விட்டார் என சரண்ராஜ் நாடகமாடி உள்ளார். இச்சம்பவம் பற்றி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

kolathur murder

தகவல் அறிந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கொளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடிபோதையில் இருந்த கொலையாளி சரண்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com