
ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 80 வயதான மூதாட்டி லட்சுமி தேவம்மா இவர் கடந்த 6 நாட்களுக்கு முன்பு சீனிவாசபுரம் தேவாலயத்திற்கு செல்வதாக சொல்லிவிட்டு தனது ஊரில் இருந்து சீனிவாசபுரத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். தேவாலயத்திற்கு சென்று வணங்கிவிட்டு அதே ஊரில் உள்ள தனது உறவினர்கள் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி ஓய்வு எடுத்துள்ளார்.
பின்னர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக சீனிவாசபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்திற்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் மூதாட்டியிடம் வெகு நேரம் பேச்சு கொடுத்து அவரை பேருந்து நிலையத்திற்கு பின்புறம் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
மேலும் மூதாட்டியிடம் இருந்த பணம் நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடியுள்ளார். அவ்வழியே சென்ற பொதுமக்கள் மூதாட்டியின் உடலை பார்த்து போலீசாருக்கு தகவளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் தேவம்மாளின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என போலீசில் புகார் அளிக்க வந்த நிலையில், மூதாட்டியின் உடலை அடையாளம் கண்டு கொலை செய்தவரை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகாரளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றிய போலீசார் அதில் மூதாட்டியை தூக்கிச் சென்ற நபரை அடையாளம் கண்டறிந்து தேடி வந்துள்ளனர்.
சீனிவாசபுரம் மொஹல்லா பகுதியில் வைத்து கைது செய்தனர். விசாரணையில் அந்த மர்ம நபர் மொஹல்லா பகுதியை சேர்ந்த முன்னிசாப் என்பவரின் 30 வயதான மகன் பாபாஜான் என்பதும் மூதாட்டியிடம் இருந்த பணத்திற்கு ஆசைப்பட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
தேவாலயத்திற்கு வந்த 80 வயதான மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது. அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்