

கர்நாடக மாநிலம், பெங்களூர் மாவட்டத்தில் உள்ள யஷ்வந்த்புரா, முத்யாலம்மா நகரை சேர்ந்தவர் 32 வயதுடைய நரசிம்மராஜு. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் திருமணம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் அவருக்கு பக்கத்து வேட்டை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாகமாறி இருவருக்கும் அடிக்கடி தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் நரசிம்மராஜூ வீட்டிற்கு வந்து அவருடன் தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். மேலும் பெண்ணின் உறவினர்களும் பக்கத்து வீட்டுக்காரர் என்ற வகையில் நரசிம்மராஜுவுடன் நட்பாக பழகி வந்திருக்கின்றனர். எனேவ நரசிம்மராஜூ பெண்ணின் உறவினர்கள் இருக்கும் போது அவரது வீட்டிற்கு சென்று பழகி வந்திருக்கிறார். மேலும் அவர்களது குடும்பத்துடன் வெளியில் செல்லும் போது நரசிம்மராஜூவும் அவர்களுடன் சேர்ந்து செல்வார் எனப்படுகிறது.
இந்நிலையில் பெண்ணின் வீட்டாருக்கு இவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெண்ணின் செயல்பாடுகளை கவனிக்க தொடங்கியுள்ளனர். இதை அறிந்த பெண் நரசிம்மராஜுவுடன் பேசாமல் இருந்த நிலையில் நரசிம்மராஜூ தொடர்ந்து அவருக்கு போன் செய்து தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்து தொல்லை செய்து வந்திருக்கிறார். இதன் காரணமாக கடந்த (நவ 22) ஆம் தேதி பெண் தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நரசிம்மராஜூ வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அறிந்த குடும்பத்தினர் நேரடியாக நரசிம்மராஜூ வீட்டிற்கு சென்று இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் நரசிம்மராஜூவை தனியாக அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நரசிம்மராஜூவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.