

கேரளா இடுக்கி கொழுக்குமலையில் சுற்றுலாப் பயணி ஒருவர் பள்ளத்தாக்கில் குதித்து உயிரிழந்தார். இறந்தவர் தமிழ்நாடு சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த N. திரவினேஷ் என்பவர் என தகவல் கிடைத்துள்ளது.
கேரளா இடுக்கி மாவட்டத்தின் பிரபலமான டிரெக்கிங் தலமான கொழுக்குமலைக்கு இன்று காலை நண்பர்களுடன் சுற்றுலா வந்துள்ளார் திரவினேஷ். நண்பர்களுடன் சிம்ம பாறை பகுதியில் இருந்த போது எதிர்பாராத விதமாக பாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். சுமார் 700 அடி ஆழமுள்ள இந்த பள்ளத்தாக்கில் குதித்த திரவினேஷ் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
இது தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் கருதுகின்றனர். மேலும் உயிரிழந்த திரவினேஷ் காதல் தோல்வியால் ஏற்பட்ட மனவேதனையை தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்ததாகவும், அந்த மன உளைச்சல் காரணமாக இந்த முடிவு எடுத்திருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த பள்ளத்தாக்கு தமிழ்நாடு எல்லைப் பகுதிக்குள் உள்ளது என்றும் அங்கு தான் இந்த தற்கொலை நடந்துள்ளது. அதிர்ச்சியில் ஆழ்ந்த திரவினேஷின் நண்பர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். பின்னர் அவருடன் வந்திருந்த நண்பர்களும், ஜீப் ஓட்டுநர்களும் உடனடியாக தாங்களே மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பின்னர் மூணாறில் இருந்து வந்த தீயணைப்புப் படையினர் கயிறு கட்டி பள்ளத்தாக்குக்குள் இறங்கி திரவினேஷ் உடலை மீட்டனர்.
அதையடுத்து சாந்தன்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மற்றும் இன்குவெஸ்ட் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பின்னர் உடல் இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். அவர் பள்ளத்தாக்கியில் குதிக்கும் காட்சியை அங்கிருந்த வேறொரு சுற்றுலாப்பயணி எதர்ச்சியாக வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த காட்சிகள் பார்ப்போரை பதட்டமடைய செய்கிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்