

திருவள்ளூர் மாவட்டம், தாதுக்கான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி பார்வதி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் யாரும் இல்லாமல் மூதாட்டி கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தனியாக வசித்து வருகிறார். எனவே மூதாட்டியை அவரது அக்கா மற்றும் அண்ணா பிள்ளைகள் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். மூதாட்டியை வீட்டிற்கு அருகே உள்ள பம்பு செட்டில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வந்து குளித்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று விடியற்காலை 3 மணி அளவில் எதோ சத்தம் கேட்டதால் மூதாட்டி வெளியில் வந்து பார்த்துள்ளார் அப்போது குடிபோதையில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மூதாட்டியின் வீட்டை நோக்கி வருவதை பார்த்து அவர் உள்சென்று கதவை மூட முயற்சித்துள்ளார். ஆனால் அவர் அதனையும் மீறி மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து அவரை கட்டிப்பிடித்து கட்டிலில் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த மூதாட்டி உடனடியாக தான் தாங்கி நடக்க பயன்படுத்தும் கட்டையை வைத்து அந்த வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் அலறி அடித்துக் கொண்டு வீட்டில் இருந்து தப்பிக்க நினைத்த அந்த வாலிபர் வலி தாங்க முடியாமல் ஓடியுள்ளார். அவர் ஓடும்போது கையில் இருந்த செல்போன் தவறி கீழே விழுந்த நிலையிலும் அவர் அந்த செல்போனையும் எடுக்காமல் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். உடனடியாக மூதாட்டி இது குறித்து அவரது உறவினர்களுக்கு கொடுத்த தகவலின் பேரில் வீட்டிற்கு வந்த உறவினர்களை , செல்போனை தவற விட்டு சென்ற அந்த இளைஞர் மீண்டும் வருவதை அறிந்து வீட்டிற்குள் மறைத்திருந்தனர். பின்னர் வீட்டிற்குள் நுழைந்த இளைஞனை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர்.
தொடர்ந்து நடந்ததை குறித்து 80 வயது மூதாட்டி திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு கொடுத்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் மற்ற போலீசார் உடனடியாக அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் சேலை கிராமத்தை சேர்ந்த பாளையம் என்பவரின் மகனான 35 வயதுடைய குமரேசன் என்பதும், பெயிண்ட்டரான இவர் குடிபோதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும் தெரியவந்தது. குடிபோதையில் தனியாக வசிக்கும் மூதாட்டியிடம் வாலிபர் அத்துமீறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.