கிருஷ்ணகிரியில் மூதாட்டிக்கு நடந்த பாலியல் கொடூரம் ! மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு..

தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்...
கிருஷ்ணகிரியில் மூதாட்டிக்கு நடந்த பாலியல் கொடூரம் ! மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு..
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பயங்கரம். இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வயதான வயதான முதியவரை தாக்கி கொலை செய்து அவரின் மனைவியை கற்பழித்த கொடூரம்.

ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சி, ஒபகவலசை கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன்(75) மற்றும் இவரது மனைவி சென்னம்மாள் (70) வயதான தம்பதிகள் விவசாய குடும்பத்தை சேர்த்தவர்கள். சம்பவம் நடந்த அன்று இருவரும் வழக்கம் போல் இரவில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். முதியர் கண்ணப்பன் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அவரின் மனைவி வீட்டிற்கு உள்ளே தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார் அப்போது வெளியில் சத்தம் கேட்டுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர் கண்ணப்பனை கல்லால் கடுமையாக தாக்கி உள்ளார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி சென்னம்மாள் கதவு திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் நிர்வாணமாக இருந்துள்ளார். பதற்றமடைந்த மூதாட்டி அவரது கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். மூதாட்டி சென்னம்மாளை அந்த மர்ம நபர் தடுத்து தாக்கி உள்ளார். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார். இவர்களுடைய அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த பொழுது அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.

இதன் பிறகு பொதுமக்கள் உதவியுடன் கண்ணப்பன் சென்னம்மாள் இருவரையும் ,ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் சிகிச்சை பலனின்றி முதியவர் கண்ணப்பன் இறந்துள்ளார். படுகாயத்துடன் அனுமதிக்க பட்ட அவரது மனைவி சென்னம்மாள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த சென்னப்பனின் உடல் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, ஊத்தங்கரை டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் தீவிரமாக விசாரணை செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினரை தாக்கி கணவரை கொலை செய்து மேலும் அவரது மனைவியை கற்பழித்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com