
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காசியம்மாள் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகளை கொட்டாவூரில் உள்ள கிருஷ்ணனின் உறவினருக்கு திருமண செய்து கொடுத்துள்ளனர். மேலும் இரண்டாவது மகளை செங்கம் அருகில் உள்ள பரமனந்தல் கிராமத்தில் உள்ள உறவினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இரண்டு மகள்களும் திருமணத்திற்கு பிறகு அவர்களது கணவர் வீட்டில் வாழ்ந்து வரும் சூழலில் கிருஷ்ணன் மற்றும் காசியம்மாள் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
கிருஷ்ணன் மற்றும் கசியம்மாள் தம்பதிக்கு உடலில் சில பிரச்சனைகள் இருந்ததால் இருவரும் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று அவர்களது மகள்கள் வீட்டில் ஒன்று இரண்டு நாட்கள் தாக்கி விட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்நிலையில் சில திணைக்கு முன்பு கிருஷ்ணன் மற்றும் காசியம்மாள் தம்பதி தங்களது வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கணவனும் மனைவியும் வீட்டில் இல்லாததை கவனித்த அக்கம் பக்கத்தினர் வழக்கம் போல மருத்துவமனைக்கு சென்றிருப்பார்கள் என நினைத்துள்ளனர்.
இன்று காலை குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அப்பகுதி மக்கள் எங்கு துர்நாற்றம் வருகிறது என பார்த்தபோது கிருஷ்ணனின் வீட்டிலிருந்து வருவதை அறிந்து வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு செங்கம் காவல் துறையினர் விரைந்து சென்றனர்.
பின்னர் செங்கம் காவல் துறையினர் இரண்டு சடலங்களையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்களை உதவிக்கு அழைத்து தாழிட்ட கதவை உடைத்து கணவன் மனைவி ஆகிய இருவரின் சடலத்தை மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கணவன் மனைவி இருவருக்கும் உடலில் ஏற்பட்ட தீர்க்க முடியாத நோய் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி இறந்திருக்கலாம் என காவல்துறை வட்டாரம் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.