பழனியில்.. இரவு முழுவதும் காதலுனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த மாணவி.. விடிந்ததும் அவசர அவசரமாக.. காலை 6.30 மணிக்கு நடந்த பயங்கரம்!

இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்ததாக...
பழனியில்.. இரவு முழுவதும் காதலுனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த மாணவி.. விடிந்ததும் அவசர அவசரமாக.. காலை 6.30 மணிக்கு நடந்த பயங்கரம்!
Published on
Updated on
2 min read

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சித்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகள் 22 வயதுடைய புவனேஸ்வரி. இவர் திண்டுக்கல் அருகே நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் வடமதுரை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நந்தகுமார் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நந்தகுமார் வடமதுரையில் போட்டோ ஸ்டுடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

விடுதியில் தங்கி கல்லூரி படித்து வந்த மாணவி இரண்டு நாட்கள் விடுமுறைக்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். மூன்றாம் ஆண்டு என்பதால் மருத்துவமனையில் பயிற்சி காலத்தில் இருந்த மாணவி இன்று 7 மணிக்குள் பயிற்சி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என நேற்று மாலை 4 மணியளவில் அவருடைய வீட்டில் கல்லூரிக்கு செல்வதாக கூறி காதலனை பார்க்க புறப்பட்டு வந்துள்ளார். அதன் பின் புவனேஸ்வரியும் அவருடைய காதலனும் காரில் பழனி சென்று அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

Admin

பின்னர் இன்று காலை 7 மணி அளவில் நர்சிங் கல்லூரியில் அந்த மாணவி வகுப்பில் இருக்க வேண்டும் என்பதால் இருவரும் அவசரமாக புறப்பட்டு காரில் கல்லூரிக்கு செல்வதற்காக நத்தம் நோக்கி கிளம்பி வந்துள்ளனர். அப்போது காலை ஆறு முப்பது மணி அளவில் பழனியை அடுத்த ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி மாட்டுப் பாதை என்கிற இடத்தில் கார் வந்த போது ரோட்டில் இருந்த வளைவை நந்தகுமார் கவனிக்காமல் காரை வலது பக்கமாக திரும்பாமல் நேராகவும் வேகமாகவும் சென்றதால் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் தலை குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில் புவனேஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் இருந்த காதலன் நந்தகுமார் ஒரு சில காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். பின்னர் சம்பவம் இடத்திற்கு வந்த சத்திரப்பட்டி காவல்துறையினர் உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர், மேலும் இந்த விபத்து குறித்து காதலர் நந்தகுமாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com