“வாழைத்தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட கள்ளக்காதலி” - திருமணம் செய்து கொள்ள மிரட்டியதால் காதலன் ஆத்திரம்!

இதில் புதைக்கப்பட்ட பெண்ணுக்கு 30 லிருந்து 35 வயது இருக்கும் எனவும், கத்தியால் கழுத்தை அறுத்து, கல்லால் தலையில் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்து...
“வாழைத்தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட கள்ளக்காதலி” - திருமணம் செய்து கொள்ள மிரட்டியதால் காதலன் ஆத்திரம்!
Published on
Updated on
2 min read

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கெட்டிசெவியூர் சாந்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் மோகன், இவர் பாறை காடு பகுதியில் உள்ள தனது சொந்த நிலத்தில் வாழை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் மோகனுக்கு சொந்தமான வாழை தோட்டத்துக்கு நேற்று காலை காளான் தேடி அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சென்றுள்ளார். அப்போது வாழை தோட்டத்தில் காளான் தேடி நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு சிறிய அளவிலான கத்தியும், ரத்த கரையும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக தோட்டத்தின் உரிமையாளர் மோகனுக்கும் காவல் துறையினருக்கும் போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது அங்கு பெண் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மோப்ப நாய் ராஜா வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர், மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர். அதனை தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் புதைக்கப்பட்ட பெண்ணுக்கு 30 லிருந்து 35 வயது இருக்கும் எனவும், கத்தியால் கழுத்தை அறுத்து, கல்லால் தலையில் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளி குறித்தும் சிறுவலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கெட்டி செவியரில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண் ஆப்பக்கூடல் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சோனியா என்பது கண்டறியப்பட்டது.

Admin

சோனியா ஈரோடு திண்டல் பகுதியில் பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்திருக்கிறார். மேலும் இறந்து போன சோனியாவுக்கு, 12 ஆம் வகுப்பு பயிலும் ஒரு மகனும், 10 ஆம் வகுப்பு பயிலும் ஒரு மகளும் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சோனியா புதுக்கரை புதூர் பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணி செய்து வந்த நிலையில், அதே கம்பெனியில் பணிபுரியும் மோகனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாததால் கருத்து வேறுபாடு காரணமாக மோகன் தன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சோனியாவும் மோகனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அவ்வப்போது மோகனுக்கு சொந்தமான பாறைக்காடு பகுதியில் உள்ள அவரது விவசாய வாழைத் தோட்டத்தில் இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. கணவன் இறந்து போன நிலையில், சோனியா தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவ்வப்போது மோகனை மிரட்டி வந்துள்ளார். இதற்கிடையே சோனியா ஈரோடு திண்டல் பகுதியில் பியூட்டி பார்லர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

Admin

சோனியா தொடர்ந்து மோகனை தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் . என மிரட்டி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சோனியாவை பாறைக்காடு பகுதியில் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வரவழைத்த மோகன் சோனியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்த கல்லை எடுத்து சோனியாவை தலையில் பலமாக தாக்கியுள்ளார், மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து அங்கேயே குழி தோண்டி வாழை தோட்டத்தில் புதைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சோனியாவின் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், சோனியாவின் தாய் தன் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு வரவழைத்து கொலை செய்யப்பட்டவர் தன் மகள் சோனியா தான் என உறுதி செய்தனர். பின்னர் திருமணம் செய்ய வற்புறுத்திய காரணத்தால் கொலை செய்து புதைத்த மோகனை சிறுவலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com